15 May 2021

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை பரிசோதிப்பதற்கான உபகரணம் வழங்கிவைப்பு!

SHARE

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை பரிசோதிப்பதற்கான உபகரணம் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான உபகரணமொன்றினை கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (14) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு என்.கே.டீ ரத்னம் அற்ட்கோ நிறுவனத்தின் உரிமையாளரினால் 1.52 மில்லியன் பெறுமதியான உபகரணம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த ஆகியோர் முன்னிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சினி, நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் பி.தேவகாந்தன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, 231 வது படைப்பிரிவின் விறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி,  பிரதேச செயலாளர்களான திருமதி.ந.சத்தியானந்தி மற்றும் வீ.வாசுதேவன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: