18 Dec 2020

மட்டு.மாநகர சபை பிரதேசத்தில் டெங்கு நோய் தீவிரம் 163 வீடுகளில் சோதனையில் 63 வீடுகளில் டெங்கு நுளம்புகள் கண்டுபிடிப்பு.

SHARE

மட்டு.மாநகர சபை பிரதேசத்தில் டெங்கு நோய் தீவிரம் 163 வீடுகளில் சோதனையில் 63 வீடுகளில் டெங்கு நுளம்புகள் கண்டுபிடிப்பு.மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரமாக டெங்கு நோய் பரவி வருகிறது.இவ்வாண்டு இதுவரையான காலப் பகுதியில் 2887 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்க மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வியாழக்கிழமை (17) முழுநாளும் மட்டக்களப்பு பெரிய உப்போடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின்போது 163 வீடுகளில் சோதனையிடப்பட்டன.அவற்றுள் 63வீடுகளில் டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதுடன் இரு தினங்களில் தூய்மைப் படுத்தவிட்டால் வழக்குத் தொடரப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டடுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.











கோட்டைமுனை பொது சகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தலைமையில் நாவற்குடா பொது சுகாதார பாசோதகர் சோமாலை தீபகுமாரன் உட்பட சுகாதார அதிகாரிகளும் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: