11 Jul 2020

மட்டக்களப்பில் கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயில் தியான மண்டபத்தில் அனைவரும் வழிபாடு செய்யலாம்.

SHARE
மட்டக்களப்பில் கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயில் தியான மண்டபத்தில் அனைவரும் வழிபாடு செய்யலாம்.
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான கிழக்குமாகாண கிளை மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ளது. நீண்டகால வரலாற்றைக் கொண்ட இந்த கல்லடி  ஸ்ரீ ராமகிருஷ்ண மிசன், மாணவர்கள் அறநெறிப் பாடங்களை தங்கி கற்கும் நிலையமாகவும் ஆஸ்ரமமாகவும் செயற்பட்டு வருகின்றது. அங்கு அமைந்துள்ள பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயில் சுமார் 50 ஆண்டு காலமாக அனைவரினதும் பக்திக்கும், வழிபாட்டிற்கும் உரிய திருத்தலமாகவும், தியான நிலையமாகவும் இயங்கி வருகின்றது.

சுமார் 150 பேர் மட்டும் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய இத்திருக்கோயிலை பக்தர்களின் கோரிக்கைக்கமைய விஸ்தரித்து, சுமார் 500 பேர் அமரக்கூடிய கோயில் ஒன்றாக நிர்மாணிப்பதற்கான தேவை நீண்டகாலமாக உணரப்பட்டு வருகின்ற விடயமாகக் காணப்படுகின்றது. இத்தேவையினை நிறைவு செய்வதற்காக இத்திருக்கோயிலின் பிரார்த்தனை மண்டபத்தினை விஸ்தரித்து மேற்கூரையினை புதிதாக மாற்றியமைத்து புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் நிருவாகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 15 மில்லியன் ரூபாய் செலவாகுமென உத்திதேசிக்கப்பட்டுள்ளதாக கல்லடி  ஸ்ரீ ராமகிருஷ்ண மிசனின் தலைவர் சுவாமி தக்ஷஜானந்தா தெரிவிதுள்ளார். 

இத்திருக்கோயிலின் திருத்தப்பணி தொடர்பாகவும், இதனை பக்தர்கள் பயன்படுத்துவது தொடர்பிலும் சனிக்கிழமை (11) கல்லடி  ஸ்ரீ ராமகிருஷ்ண மிசனின் சுhமிகளான, சுவாமி தக்ஷஜானந்தா, மற்றும். சுவாமி நீலாமாதேவானந்தா ஆகியோர் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷணமிஷில் வைத்து ஊடகங்களுக்குக் கதுத்துத் தெரிவித்தனர்.

இங்கு அமையப்பெறும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயில் தியான மண்டபத்தில் மாணவர்கள் மாத்திரமின்றி வெளிநபர்கள் அனைவரும் வழிபாடு செய்யலாம். ராமகிருஷ்ண மிஷன் என்றால் இலங்கையில் அதன் மறுபெயர் மற்றவருக்கு உதவி செய்யும் அமைப்பாகும் என்ற அளவிற்கு எமது மிஷன் மக்களுக்கு சேவை செய்து வருகின்றது. ஏற்பட்டுள்ள கோவிட் -19 என வைஸசினால் நாம் எதை இழந்திருக்கின்றோம் என்று கேட்டாலும், மனதில் நிம்மதி உள்ளதா என்று கேட்டாலும், சிலருக்கு சங்கடமான நிலமைதான். பாரம்பரியம், பண்பாடு, கலாராசங்களையும் இழந்த விட்டோம். இந்த சந்தர்ப்பத்தில் ஆன்மீகம், பாரம்பரியம், கலாசாரங்களை நாம் தர விரும்புகின்றோம். அதற்காகத்தான் இந்த தியான மண்டபம். 

இது மத நல்லிணக்கதை வலியுறுத்துவதற்குச் சான்றாக விளங்கு. அதுமாத்திரமின்றி இன்றைய தலைமுறையினருக்கு பல பயிற்சிகளை, ஆன்மீகக் கருத்துக்கள்,  வழங்கி ஆன்மீகம் என்பது விஞ்ஞானத்திற்குப் புறம்பானது அல்ல, அன்றாட வாழ்விற்குப் புறம்பானது அல்ல, வயதான காலத்தில் வாழ்க்ககூடிய ஒரு வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும், மனப்போக்கை மாற்றியமைத்து, அன்றாடாம் ஆன்மீகத்தில் வாழ்வதால் மனதில் அமைதி நிலவும். ஆலயத்திற்குச் சென்று சடற்கு சம்பிரதாயத்தில் கலந்துவிட்டு வருவது மாத்திரம் ஆன்மீகம் அல்ல. அது ஆன்மீகத்தின் ஆரம்பம் மாத்திரமே. ஆன்மீகம் என்பது நமது சுவாசம் போன்றது. அன்றாடம் அனுபவிப்பதாகும். இதற்கு இந்த தியான மண்டபம் உறுதுணையாக அமையும் என எனவே மக்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு இங்கு வழங்கப்படும் போதனைகளையும் பயிற்சிகளையும் பெற்று பயனடைய வேண்டும் என கல்லடி  ஸ்ரீ ராமகிருஷ்ண மிசனின் சுவாமி தக்ஷஜானந்தா, இதன்போது மேலும் தெரிவித்தார்.
    










SHARE

Author: verified_user

0 Comments: