27 Sept 2019

மட்டக்களப்பில் ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டத்தால் பாடசாலைகள் முழுமையாக முடங்கியது.

SHARE
மட்டக்களப்பில் ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டத்தால் பாடசாலைகள் முழுமையாக முடங்கியது. மாணவர்களும், ஆசிரியர்களும் முழுமையாக சமூகம்தரவில்லை. நாடுபூராரவும் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள், அதிபர் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வியாழக்கிழமை (26) சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டதால் மட்டக்களப்பில் பாடசாலைகள் முழுமையாக முடங்கிப்போனது.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் இந்த சுகயீனலீவு போராட்டத்தை முன்னெடுத்ததால் பாடசாலைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. இப்போராட்டமானது வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களும் முன்னெடுக்படுவதாக ஆசிரியர்கள், ஆசிரிய தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றது.

இவ்வாறு அதிபர், ஆசிரியர்களது சுகயீனலீவு விடுமுறை போராட்டத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களின் பாடசாலைகள் மாணவர்கள், ஆசிரியர்கள் இன்மையால் வெறிச்சோடிக்காணப்பட்டன. மட்டக்களப்பு நகர்புறங்களில் சில பாடசாலைகளில் சில நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதனால் பாடசாலைகளுக்கு முழுமையாக ஆசிரியர்கள் வரமாட்டார்கள் என்றும், சுகயீனலீவு போராட்டத்தை இறையதினம் ஆசிரியர்கள் மேற்கொள்ளப்போகின்றதை ஏலவே அறிந்து கொண்டபாடசாலை மாணவர்கள் வியாழக்கிழமை பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் வீதிகளில் மாணவர்களின் நடமாட்டத்தை காணமுடியாமல் இருந்ததோடு பாடசாலைக்கான சேவையில் ஈடுபடும் போக்குவரத்து பஸ்ஸ{ம் சேவையில் ஈடுபடவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு  ஆசிரியர்கள் வருகை தராத காரணத்தினால் மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டது. இதனால் பாடசாலைகள், வகுப்பறைகள் வெறிச்சோடிக்காணப்பட்டன. இன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தராத ஆசிரியர்கள் தமது சுகயீன விடுமுறையை தமது பாடசாலை அதிபருக்கு தந்திமூலம்  தெரியப்படுத்தியுள்ளார்கள்.

இதனடிப்படையில் உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் இருந்தும் வியதழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் (26,27) விலகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு வியாழக்கிழமை (26) இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. சட்டத்துறைக்கு சம்பளத்தை அதிகரித்து அரசசேவையில் ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது. 









SHARE

Author: verified_user

0 Comments: