29 Sept 2019

சர்வமத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கையின் 18 மாவட்டங்களிலிருந்தும் இந்து இஸ்லாம் பௌத்த கிறிஸ்தவ மதத் தலைவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டக்களப்புக்கு வருகை.

SHARE
சர்வமத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கையின் 18 மாவட்டங்களிலிருந்தும் இந்து இஸ்லாம் பௌத்த கிறிஸ்தவ மதத் தலைவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டக்களப்புக்கு வருகை.
சர்வமத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கையின் 18 மாவட்டங்களிலிருந்தும் இந்து இஸ்லாம் பௌத்த கிறிஸ்தவ மதத் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.

இந்த விஜயம் மிக விரைவில் மட்டக்களப்பில் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முரண்பாடற்ற, நீண்ட, நிலைத்து நிற்கும் சமாதானத்திற்கு பல்வேறுபட்ட இலங்கையர்கள் அனைவருக்குமிடையிலான கலந்துரையாடல்களும், விவாதங்களும், இணக்கத்துடனான புரிந்து கொள்ளும் முடிவுகளும் அவசியம் என்பதையும் மீள வலியுறுத்துவதற்காகவே இந்த சமூக நல்லிலணக்க விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

“இலங்கையில் அனைத்து சமயங்கள், மற்றும் அனைத்து இனங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்” Training on Pluralism Inclusive and Evolving a Pluralistic National Identity Through Community Engagement. For District Inter- Religious Committee  எப்போதும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய மனோகரன் நீடித்து நிலைக்கும் சமாதானத்திற்கு இதுவே அடித்தளமாகும் என்றும் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: