4 Jul 2019

கதிர்காமகந்தனுக்கு பள்ளிவாசலில் கொடியேற்றமா? கதிர்காம முருகன்கோயிலில் மீண்டும் சேவல்கொடி ஏறுமா?

SHARE
கதிர்காமகந்தனுக்கு இஸ்லாமிய பள்ளிவாசலில் கொடியேற்றமா? கதிர்காம முருகன்கோயிலில் மீண்டும் சேவல்கொடி ஏறுமா?  
முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்கு பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக்கொடி வந்தது எப்படி?  பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தை மாற்ற திட்டமிட்ட சதியா? ஏன சந்தேகம் எழுந்துள்ளதாக பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கத்திர்காம கந்தனின் வருடாந்த உறசவக் கொடியேற்றம் புதன்கிழமை (03) இரவு இடம்பெற்றது.

கதிர்காமத்தில் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கும் போது கதிர்காமத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலிலேயே கொடி ஏற்றப்படுகிறது. முருகன் கோயிலிலோ, தெய்வானை அம்மன் கோயிலிலோ கொடி ஏற்றப் படுவதில்லை. அதுவும் அரபு எழுத்துக்கள் எழுதப்பட்ட பச்சை நிறக் கொடியே ஏற்றப்படுகிறது. இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது.

பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தின்படி கதிர்காம முருகன் கோயிலில் முருகனின் சேவல் கொடி ஏற்றப்பட்டு, அங்கிருந்து தெய்வானை அம்மன் கோயிலுக்கு கொடி எடுத்து வரப்பட்டு, அங்கு கொடிக்கு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டபின் பக்கீர் மடத்திற்கு (இன்றைய பள்ளிவாசலின் முன்பக்கம்) கொண்டு வரப்பட்டு அங்குள்ள கொடிக்கம்பத்தில் கட்டப்படும். கதிர்காமம் பற்றி எழுத்தப்பட்டுள்ள பழைய நூல்களில் இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பாரம்பரிய சைவ சம்பிரதாயம் ஏன் மாற்றப்பட்டது? இந்துசமய அமைப்புக்கள் இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா? கதிர்காம முருகன் கோயிலில் மீண்டும் சேவல் கொடி ஏறுமா? 

பாரம்பரிய சைவ சம்பிரதாயம் காப்பாற்றப்படுமா? புரியாத புதிர் - கந்தன் ஆலயத்தின் ஆரம்ப நாள் கொடியேற்றம் எதற்காக பள்ளிவாயலில் ஏற்றப்படுகின்றது.... கந்தப்பெருமானின் ஆலயத்தில் சேவல் கொடியல்லவா ஏற்றப்பட வேண்டும். பக்கதர்கள் அங்கலாய்க்கின்றனர்.


















SHARE

Author: verified_user

0 Comments: