5 May 2019

சாய்ந்தமருது பிரதேச மக்கள் தேசபக்தியுடையவர்கள் பதவி உயர்வுபெற்ற போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் டபிள்யு.டி. சுமிந்த நிஹால் வீரசிங்ஹ நெகிழ்ச்சியுடன் தெரிவிப்பு

SHARE
சாய்ந்தமருது பிரதேச மக்கள் தேசபக்தியுடையவர்கள்
பதவி உயர்வுபெற்ற போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் டபிள்யு.டி. சுமிந்த நிஹால் வீரசிங்ஹ நெகிழ்ச்சியுடன் தெரிவிப்பு
நாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவு தொடர்பில் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கிய சாய்ந்தமருது பிரதேச மக்கள் தேசபக்தியுடையவர்கள் என தாக்குபுதல் முறியடிப்பு விடயத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் அதற்காக பதவி உயர்வுடன் பணப் பரிசு பெற்ற போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தருமான டபிள்யு.டி. சுமிந்த நிஹால் வீரசிங்ஹ   நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அவருக்கு கடந்த வெள்ளிக்;கிழமை 03.05.2019  பொலிஸ் சார்ஜன்ற் தரத்திற்கான பதவியுயர்வும் பணமுடிப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டபோது இந்த விடயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக மேலும் கூறிய  அவர் இந்த வாய்ப்பும் அதிர்ஷ்;டமும் பொதுமக்கள் பொலிஸார் நல்லுறவைப் பேணும் எனது மக்கள் தொடர்பாடலுக்கு கிடைத்த வெகுமதியாகக் கருதுகின்றேன்.

சம்பவ தினமான ஏப்ரில் 26 அன்று சாய்ந்தமருது பிரதேச  தேசபக்தி மிக்க மக்களில் இருவர் என்னை சந்தித்து சம்பவத்தை விவரித்தனர்.
அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற நான் அங்கு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை அறிந்து உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினேன்.

அதனடிப்படையில் சமயோசிதமாக விரைந்து செயற்பட்டதனால் நாட்டில் இடம்பெறவிருந்த பாரிய அழிவு தடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது மனத் திருப்தியாகவும் ஆறுதலாகவும் உள்ளது” என்றார்.

மொனறாகலையைச் சேர்ந்த 36 வயதுடைய டபிள்யு.டி. சுமிந்த நிஹால் வீரசிங்ஹ 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டவர்.இவரது பெற்றோர் கிராமப்புற விவசாயிகளாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: