2 May 2019

வவுணதீவு கதிர்காமத்தம்பி இராஜகுமாரனை உடனடியாக விடுலை செய்க. இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்.

SHARE
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வவுணதீவு பொலீஸ் பாதுகாப்பு அரணில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலீஸ் அதிகாரிகள்  கொடூரமாக அடித்தும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  சந்தேகத்தின் பேரில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் என்பவர் கைதுசெய்யப்பட்டு எதுவித விசாரணைகளும் இன்றி சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இவரை விடுதலை செய்யுமாறுகோரி இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த்  ஜனாதிபதிக்கு  அவசர கடிதம் ஒன்றை புதன்கிழமை (01) அனுப்பி வைத்துள்ளார். அந்த அடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…
பல்வேறு வங்கிகளில் கடன்பெற்று கொள்வனவு செய்யப்பட்ட இவரது மோட்டார் வாகனமும் வவுணதீவு பொலீசார் கைப்பற்றிச் சென்றுள்ள நிலையில் வவுனியாவில் தலைமறைவாக இருந்தபோது  கைதுசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத்  தலைவரும் தற்கொலை குண்டுதாரியாகவும் செயற்பட்ட சஹ்ரானின் சாரதி மொஹமட் சரீப் ஆதம் லெப்பே என்ற நபரை விசாரித்தபோது வவுண தீவு பொலீசாரை படுகொலை செய்ய திட்டம் தீட்டியது, படுகொலை செய்தது அனைத்துமே  தற்கொலை தாக்குதலை  மேற்கொண்ட தௌஹீத் ஜமாஅத் தலைவர் சஹரான் என்பதை  வெளிப்படுத்தியிருந்தார். 

வவுணதீவு படுகொலைகள் தொடர்பான உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில் இது தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான கதிர்காமத்தம்பி ராசகுமாரன் அவர்களை உடனடியாக விடுதலைசெய்யுமாறும் கடும் வாழ்வாதார நெருக்கடியில்  சிக்கித்தவிக்கும் அவரது குடும்பத்தினர்க்கு நீதி கிடைக்கச்செய்யுமாறும் இந்து சம்மேளனத்தின் தலைவர் அவசர கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதியைக் கோரியுள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: