 மட்டக்களப்பு மாவட்டம் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்தவர்களாவர். என பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது களுதாவளையைச் சேர்ந்த மேற்படி இரு நண்பர்களும், தமது தேவைகளுக்காக ஒரு மோட்டார் சைக்கிளில் களுவாஞ்சிகுடிக்குச் சென்று மீண்டும் களுதாவளைக்கு வேகமாக திரும்பிக் கொண்டிருந்த வேளையில் களுவாஞ்சிகுடியில் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதிவளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதி ஓரத்தில் வீதிச் சமிக்ஞைக்கு நடப்பட்டிருந்த கம்பியின் மீது விழுந்துள்ளதனால் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது பொலிசாரும், பொதுமக்களும், இருவரையும் துரிதமாக அருகில் அமைந்துள்ள களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதில் வேலிப்பிள்ளை தீசன் மரணமடைந்துள்ளதாகவும், குணராசா ஜெகதீஸ்வரன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலை வைத்தியசாலை நிருவாகம் தெரிவித்தது.
.jpeg) 
 
.jpeg) 
0 Comments:
Post a Comment