25 Dec 2018

சிறைக் கைதிகள் நற்பிரஜைளாகவும், சீரான காலநிலையும், சிறந்த அரசியல் நிலைபெறவும் மறைமாவட்ட ஆயர் சிறைச்சாலையில் பிரார்த்தனை

SHARE
சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு நற்பிரஜைகளாக சமூகத்தில் மிளிரவும், வடபகுதியில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் நாட்டில் தளர்ச்சியடைந்துள்ள அரசியல் நிலைபெறவும் வேண்டுவதாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசெப் பொன்னையா திருப்பலியின்போது வேண்டுவதாக தனது நத்தார் செய்தியில் தெரிவித்தார்.
சிறைக் கைதிகளின் நலன் கருதி இயேசு பாலனின் பிறப்பை எடுத்தியம்பும் நத்தார் விசேட ஆராதனை மட்டக்களப்பு சிறைச்சாலையில்  சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.எச். அக்பர் பிரசன்னத்துடன் விசேட ஆராதனை செவ்வாய்க்கிழமை 25.12.2018 நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசெப் பொன்னையா, புளியந்தீவு புனித மரியாள் பேராலய பங்குத் தந்தை சி.வி.அன்னதாஸ் மற்றும் எஹெட் நிறுவகத்தின் பணிப்பாளர் அலெக்ஸ் ரொபட் ஆகியோர் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் வைத்தியக் கலாநிதி கே. ஈ.கருணாகரன், எஹெட் கரித்தாஸ் நிறுவன  பல்சமய ஒன்றியத்தின் இணைப்பாளர்களான சிவஸ்ரீ எஸ்.சிவபாலன் குருக்கள் மற்றும் ஏ.ஜே.எம். இலியாஸ் மௌலவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கைதிகளுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: