1 Nov 2018

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டதிட்டங்களை மீறி அளவுக்கதிகமான மாடுகளை வாகனத்தில் ஏற்றியதால் மாடுகள் பொலிஸார் வசம் - ஒருவர் கைது.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ்பிரிவில், அனுமதிப்பத்திரம் இன்றி சட்டதிட்டங்களை மீறி மாடுகளை ஏற்றிச் சென்றதால் மாடுகளையும் அதனை ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் சாரதி ஒருவரையும் பொலிஸார் வியாழக்கிழமை (01.11.2018)  கைதுசெய்துள்ளனர்.
மாடுகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரம் இன்றி சிறயதொரு வாகனத்தில் ஆறு மாடுகளை உணவின்றி மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கி கொண்டுசென்றதால் குறித்த சம்பவத்தின்போது ஆறு (06) மாடுகளையும் அதனை ஏற்றிச் சென்ற சிறிய பட்டா ரக வாகனத்துடன் சாரதி ஒருவரையும் தாம் கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.   

தற்போது மழை பெய்துகொண்டிருப்பதால் பொலிஸார் தம்மை கவனிக்க மாட்டார்கள் எனும் நோக்குடன் மழை பெய்யும் நேரம் பார்த்து மேற்படி மாடுகள் காத்தான்குடி நோக்கி கொண்டு செல்லப்பட்டபோது பொலிஸார் சோதனை நடாத்தி கைது செய்துள்ளனர் எனவும் பொறுப்பதிகாரி கூறினார்.

இச் சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தாம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: