23 Nov 2018

பல கிராமங்களின் குடிநீருக்கான பலவருடக் காத்திருப்பு காரியமானது

SHARE
(சறூக்) 

கிராமிய குடிநீர் வழங்கல் திட்டம் இருந்தும் சுத்தமான மற்றும் போதியளவான குடிநீரின்றி பல வருடங்கள் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்ட போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராமிய நீர் வழங்கல் திட்டங்களை சேர்ந்த மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட மொத்த குடிநீர் விநியோகம் (Bulk Supply) தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் அதன் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.எ.பிரகாஷ் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய அண்மையில் வழங்கப்பட்டது. 
அந்த வகையில் கடுக்காமுனை கிராமிய நீர் வழங்கல் திட்டம், வால்கட்டு கிராமிய நீர் வழங்கல் திட்டம், திக்கோடை கிராமிய நீர் வழங்கல் திட்டம், சுரவணையடியூற்று கிராமிய நீர் வழங்கல் திட்டம் என்பன ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த மொத்த நீர் விநியோகமானது குறிப்பிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார, மற்றும் ஆரோக்கியத்தில், சிறந்ததோர் மாற்றத்தினை தோற்றுவிக்கும் என்பது குறிப்பிடத்தக்ககதாகும். 

மேலும் இரண்டு கிராமிய நீர் வழங்கல் திட்டங்களுக்கு மொத்த குடிநீர் விநியோகத்தினை வழங்க உத்தேச மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு இன்னும் சில கிராமங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் காணப்பட்டாலும் அதற்கான நிதி ஓதுக்கீடுகள் இன்மையால் அப்பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவற்றிக்கான போதிய நிதியினை அரசியல்வாதிகள் மற்றும் தொடர்புபட்ட அதிகாரிகள் பெற்றுத்தரும் பட்சத்தில் அக்கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீரினை வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார். 




SHARE

Author: verified_user

0 Comments: