கிழக்கு மாகாண முதலமைச்சரினால் முன்வைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை இணைத்து மேற்கொள்ளப்படும் விஷேட கொத்தணி வேலைத் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை
(ஓகஸ்ட் 12, 2016) இடம்பெற்றதாக மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் தெரிவித்தார்.
வாகரை பிரதேச சபை நிருவாகத்திற்குட்பட்ட தட்டுமுனை, ஊரியன்கட்டு ஆகிய கிராமங்களில் கொத்தணி முறையிலான துப்புரவுப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 12, 2016) இடம்பெற்றன.
நீரோடைகள், வடிகான்கள், வீதிகள் உட்பட இன்னும் காடு மண்டிக் கிடக்கும் கட்டிடங்களும் துப்புர செய்யப்பட்டதாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் தெரிவித்தார்.
இந்த கொத்தணி வேலைத் திட்டத்தின் கீழ் வாகரை மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச சபைகளின் ஆளணியினர் சுமார் 20 பேரும், இயந்திராதிகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை நிருவாகத்திற்குட்பட்ட மயிலம்பாவெளியிலும் வவுணதீவு பிரதேச சபை நிருவாகத்திற்குட்பட்ட வவுணதீவுக் கிராமங்களிலும் வெள்ளிக்கிழமை நீரோடைகள், வடிகான்கள், வீதிகள் ஆகியவை கொத்தணி வேலைத்திட்டத்தின் கீழ் துப்புரவு செய்யப்பட்டதாக சித்திரவேல் மேலும் கூறினார்.
0 Comments:
Post a Comment