மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்தனமடு ஆற்றுப் பகுதிக் காடுகளிலிருந்து சட்ட விரோதமாக ஏற்றி வரப்பட்ட பெறுமதியான தேக்குமரக் குற்றிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் மறைந்திருந்த பொழுது வெள்ளிக்கிழமை காலையில் (ஓகஸ்ட் 19, 2016) இந்த மரங்கள் சிக்கியுள்ளன.
உழவு இயந்திரப் பெட்டியொன்றில் ஏற்றப்பட்ட 10 அடி நீளமான 18 மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு அதனைத் தம்வசம் ஏற்றிவந்து கொண்டிருந்த வந்தாறுமூலை மற்றும் ஐயன்கேணியைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மரங்கள் உழவு இயந்திர இழுவைப் பெட்டியுடன் எறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment