3 May 2016

மட்டக்களப்பிலுள்ள விளையாட்டு மைதானங்களின் புணரமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடு

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச் .எம்.எம் .ஹரீஸ்ஸிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல விளையாட்டு மைதானங்களின்  புணருத்தானங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


அந்த வகையில் ஏறாவூர் டாக்டர்.அஹமட் பரீட் விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ரூபா 50 இலட்சமும், மட்/மட்/ புனித மிக்கேல் கல்லூரி விளையாட்டு மைதான புனரமைப்புக்கு ரூபா 30 இலட்சமும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட கொக்குவில் பகட்டுவான் விளையாட்டு அபிவிருத்தி, காத்தான் குடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விளையாட்டு மைதான அபிவருத்தி,  வவுன தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வாகரை பொது மைதான அபிவிருத்தி. களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரிய கல்லாறு பொது மைதானம்,பட்டிப்பாளைய பிரதேச பிரிவுக்கு உட்பட்ட கொக்கட்டிச்சோலை பொது மைதான அபிவிருத்தி . போன்றவற்றிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்ச ரின் ஊடகப்பிரிவு செவ்வாய் கிழமை(03) தெரிவித்துள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: