10 Jul 2019

சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கு நீர் வழங்காமையினால் நெற்பயிர்கள் கருகியுள்ளன, விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

SHARE
சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கு நீர் வழங்காமையினால் நெற்பயிர்கள் கருகியுள்ளன, விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் நவகிரி நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட 37 ஆம் கிராமத்தின் 7 ஆம் வாய்க்கால் வயற்கண்டத்திற்குடப்பட்ட சுமார் நூறிற்கு மேற்பட்ட நெல்வயல்கள் நீரின்றிக் கருகிப்போயுள்ளதாகவும், இதற்கு நவகிரி நீர்ப்பாசனப் பிரிவு தமக்கு நீர் வழங்கவில்வையெனத் தெரிவித்தும் செவ்வாய்க்கிழமை (09) மாலை அவர்களது நெல் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

வழக்கமாக நவகிரிக் குழத்திலிருந்து நீர் தமது வேளாண்மைச் செய்கைக்கு வாரத்திற்கு ஒருமுறை நீர் திறந்து விடப்படுவது வழக்கம் ஆனால் இம்முறை இரு வாரங்களுக்கு ஒருமுறை நீர் விடப்படுவதனால் தமது நெற்பயிர்கள் உரிய காலத்தில் நீரின்றி வெய்யிலில் கருகிப்போய் விட்டதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தாம் பரம்பரை பரம்பரையாக வேளண்மைச் செய்கையைத்தான் தமது ஜவனோபாயத் தொழிலாகச் செய்து வருகின்றோம். ஆனால் கடந்த மாரிப்போகச் செய்கையில் பூச்சித்; தாக்கங்களினால் தமது நெற்பயிர்கள் அழிந்து போயின அதற்கும் எதுவித இழப்பீடுகளும் கிடைக்கவில்லை, தற்போது நீரின்றி தமது வாழ்வாதார நெற்பயிர்ற்செய்கை கைவிடப்பட்டுள்ளது இதற்காவது அரசாங்கம் எமக்கு இழப்பீடுகளையாவது தந்துதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அப்குதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சுழற்சிமுறையில்தான் நாங்கள் விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்காக நீரை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் நவகிரிப் பிரிவுக்குகக் கீழ் தும்பங்கேணி, கடுக்காமுனை, சில்லிக்கொடி, மற்றும் வெல்லாவெளி ஆகிய 4 கிளை வாய்க்கால்கள் உள்ளன. தற்போது நவகிரிக் குளத்தின் நிர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த வாய்க்கால்களுக்கு சுழற்சிமுறையில்தான் நீர் வழங்கி வருகின்றோம். இந்நிலையில் குளத்தில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தவுடன் நீர் உரியமுறையில் வழங்கமுடியாமல் போய்விட்டது. 

ஒருகிழமைக்கு ஒரு தடைவ நாம் இதுவரையில் நீர் வழக்கவில்லை. குளத்தில் நீர் மட்டம் தற்போது 10.5 அடி உள்ளது. குளத்தினுள் இருந்த கற்பாறையை உடைத்துவிட்டும், குளத்தினுள் வாய்க்கால் வெட்டியும், நீரைக் விவசாயிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றோம். தற்போது குளம் அமைந்துள்ள பகுதியில் மழை பெய்கின்றது. மேலும் அப்பகுதியில் பொடிவெவ என்ற சிறிய குளம் ஒன்றும் உள்ளது அந்தக்குளம் நிரப்பியபின்னர்தான் இப்பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால்களுக்கு நிர் வரும். கொலனி வயற்கண்டம் மேட்டுப்பகுதியாக அமைந்துள்ளது இதனால் அவ்வயல்களுக்கு நீர் விட்டால் விரைவாக வற்றிவிடுகின்றன. 

குளத்தின் நீர்மட்டம் வழக்கமாக 31 அடி நீர்மட்டம் இருக்கும்போது மேற்கொள்ளப்படும் 7300 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கைதான் இம்முறையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு 150 ஏக்கர் மாற்றுப் பயிர் செய்கையையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஸ்ட்ட ஈடு கொடுப்பதற்குரிய நடவடிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம், கமநலத்திணைக்களம், விவசாயத்திணக்களம். உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும் என நவகிரிப் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் மு.பத்மதாசனை இவ்விசாயிகளின் கோரிக்கைகள் குறித்து தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார். 















SHARE

Author: verified_user

0 Comments: