1 Jul 2019

அகில இலங்கை ரிதியிலான 45 வது கடற்கரை கபடி விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு அணி முதலிடம்.

SHARE
அகில இலங்கை ரிதியிலான 45 வது கடற்கரை கபடி விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு அணி முதலிடம். 
அகில இலங்கை ரிதியிலான 45 வது கடற்கரை கபடி விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திணை பிரதிநிதித்துவப்படுத்தி கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் கிரான் கருனா ஜக்கிய விளையாட்டு கழகத்தின் விராங்கணைகள் முதலாம் இடத்தினை பெற்று மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கபடிப்போட்டியில் வெற்றிபேற்ற விரவிராங்கணைகளை வரவேற்றுக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (01) காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது இன் நிகழ்வில் முன்னால் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார். சகல விராங்கனைகளும் தேசிய ரிதியில் உலகத்தில் சிறந்த விராங்கணைகளாக திகழவேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொடுத்த விராங்கணைகளை பாராட்டப்பட வேண்டியவர்கள் உண்மையில் விளையாட்டடு நமது மாவட்டத்தில் உள்ள விரவிராங்கணைகளை சிறந்த பயிற்றுவிப்பாளர்கள் மூலமாக வெளிக்கொண்டு வரவேண்டும் என இதன்போது அரசாங்க அதிபர் மா.உதயகுமார தெரிவித்தார்.

இன் நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் பிரதம கணக்காளர் க.ஜேகதீஸ்வரன் மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி முகுந்தன் நவரூபரஞ்சிணி மற்றும் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் அத்தோடு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்; எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொன்டிருந்தனர். 

விளையாட்டு விராங்கணைகளான ஆ.கஜேந்தி. எஸ்.கோகுலவாணி யூ.இந்திக்கா ரீ.சோபினி எம்.கோகலிக்கா எஸ்.யதுஸ்திக்கா ஆகிய வீராங்கணைகள் இப்போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். இவர்களை எஸ்.மதன்சிங் பயிற்றுவித்திருந்தார். இந்நிலையில் இதன்போது நடைபெற்ற  ஆண்களு;ககான கபடிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை வடக்கு பிரதேசசெயலக பிரிவின் விளையாட்டு அணியின் ஆண்கள் பிரிவினர் இரண்டாம் இடத்திணை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது  

SHARE

Author: verified_user

0 Comments: