23 Jun 2019

மட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு.

SHARE
மட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல்  வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த  1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையினல் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தினை மீள கட்டுவதற்காக  ஞாயிற்றுக்கிழமை (23.06.2019) அடிக்கல் நடப்பட்டது.

ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலய அருட்தந்தை அன்ரனி டிலிமா தலைமையில் நடைபெற்ற  இவ் அடிக்கல் நடும் நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மண்முனை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் குகநாதன், உன்னிச்சை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி, ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும்  பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

உன்னிச்சை, நெடியமடு கிராமத்தில் அமைந்துள்ள இவ்அந்தோனியார் ஆலயத்தில் கடந்த 90 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குமுன் அங்குள்ள மக்கள் தமது வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர் பின்னர் அக்காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணத்தால் இவ் ஆலயம் அழிவடைந்துள்ளது. இக் காலப்பகுதியில் இங்குள்ள மக்கள் தமது வீடுகளையும் உடமைகளையும் கைவிட்டு இடம்பெயர்ந்து சில வருடகாலம் வேறு பிரதேசங்களில் வாழ்ந்துவந்தனர். முற்றாக அழிவடைந்த இவ் ஆலயத்தை புதிதாக அமைக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 








SHARE

Author: verified_user

0 Comments: