21 Jun 2019

கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் குழுவினை பொதுமக்கள் கலைத்தனர்.

SHARE
கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் குழுவினை பொதுமக்கள் கலைத்தனர்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (21) மாலை  கல்முனைக்கு விஜயம் செய்த அமைச்சர்களான மனோ கணேசன் தயா கமகே உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர்களான எம.ஏ.சுமந்திரன் க.கோடிஸ்வரன் ஆகியோரை போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தூசித்து கலைத்தனர்

 மேற்குறித்த மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு தரப்பினர் அவர்களை பொதுமக்களின் தாக்குதலில் இருந்து அவ்விடத்தில் இருந்து வெளியேற்றி அழைத்து சென்ற போதிலும் குறித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது.

மேலும் குறித்த பிரதேச செயலகம் தொடர்பாக மேற்படி மக்கள் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கடிதங்களை பொதுமக்கள் போராட்டகாரர்கள் நிராகரித்து கிழித்து எறிந்தனர்.

அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உரிய தீர்வு கிடைக்க பெறாத விடத்து நஞ்சு குடித்து சாவதற்கு தயாராக உள்ளதாக உண்ணாவிரதத்தில் பங்குகொண்ட தேரர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் போது அங்கு வந்த மக்கள் பிரதிநிதிகள் குழு  கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான இறுதி முடிவினை ஆராய்ந்து இவ்விரு சமூக  பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் தெரிவித்து நகர்ந்தனர்.

 இந்நிலையில் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்தக்கூடாது என்ற நொக்குடன் வியாழக்கிழமை அப்பகுதி முஸ்லிம் மக்கள் மேற்கொண்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தற்போதும் தொடர்கின்றது.













SHARE

Author: verified_user

0 Comments: