18 Mar 2019

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 20 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை முன்னேற்ற வழிகாணப்பட வேண்டும். மாவட்ட காணிக்குப் பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 20 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை முன்னேற்ற வழிகாணப்பட வேண்டும். மாவட்ட காணிக்குப் பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 20 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு விடிவு வேண்டும் என மாவட்ட காணிக்குப் பொறுப்பான மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன் தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலகமும் (வீ எபெக்ற் - We Effect) சர்வதேச தன்னார்வ உதவு ஊக்க நிறுவனம் உள்ளிட்ட இன்னும் சில தொண்டு நிறுவனங்களின் அனுசரணையோடும் இடம்பெற்ற தொழில் முயற்சியாண்மை பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 18.03.2019 இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பெண் தலைமை முயற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டதோடு சர்வதேச பெண்கள் தினத்தையொட்டிய பெண்களை வலுவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய நவரூபரஞ்சினி, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
எனவே இக்குடும்பங்கள் மீது முக்கிய கரிசனை கொண்டு இக்குடும்பங்களிலுள்ள முயற்சியாளர்களான பெண்களை இனங்கண்டு அவர்களிடமுள்ள தொழிற் திறன்களை மேலும்  வளர்க்க உதவ வேண்டும்.
கிராம மட்டத்தில் கடமையாற்றுகின்ற ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் முயற்சியுடைய பெண்களை இனங்கண்டு அவர்களை மேலும் முன்னேற்றத்திற்குக் கொண்டு வருவதற்கு உக்க உதவிகளை வழங்க வேண்டும்.
பெண்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் பல்வேறு வகிபாகங்களை ஏற்று பணிபுரிகின்றார்கள்.
பெண்கள் மன வலிமை உடையவர்கள் என்பதை அவர்கள் எத்pர்கொண்ட பாதிப்புக்களையும் அவர்கள் எதிர் நீச்சல் செய்து வெற்றி கண்ட கண்ட விடயங்களையும் கொண்டு நிரூபிக்க முடியும்.
அவ்வாறான பெண்கள் கௌரவிக்கப்பட வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்று தங்களது குடும்பங்களுக்காக சொல்லொண்ணாத் துயரங்களைத் தாங்கிக் கொண்டு பாடுபட்டுழைத்துக் களைத்துப் போயிருக்கும் பெண்களும் கௌரவிக்கபட வேண்டும்.
அப்பெண்கள் துயரங்களை அனுபவிக்கின்றார்கள். அப்படியிருந்தும் தங்களது குடும்ப நல்வாழ்வுக்காகவே அவர்கள் மீண்டும் மீண்டும் பணிப்பெண்களாக வெளிநாடு செல்கின்றனர்.
மார்ச் 8ஆம் திகதி  மட்டும் பெண்களைப் பாராட்டி கௌரவித்தால் போதாது.
அவர்கள் தினமும் தமது அர்ப்பணிப்;புக்காக  மதித்து போற்றப்படவும் வேண்டும்.
எதிர்காலத்திலே ஆண்களே பெண்கள் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பது எனது அவா.
அதன் மூலமே பெண்களுக்கு வீட்டிலும் சமூகத்திலும் நாட்டிலும் சர்வதேச அளவிலும் முழுமையான  அந்தஸ்தும் கௌரவமும் நிம்மதியும் கிடைக்கும்”என்றார்.
இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு வாழைச்சேனை பிரதேரச சபை தரவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் (வீ எபெக்ற் - We Effect)நிறுவனத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரீ. மயூரன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியந்த ஜயகொடி காவியா நிறுவன பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார் உட்பட இன்னும் பல அலுவலர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: