10 Feb 2019

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருடனான தொழிற்சந்தை நிகழ்வுக்கான கலந்துரையாடல்.

SHARE

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருடனான தொழிற்சந்தை நிகழ்வுக்கான கலந்துரையாடல்.
வேலையில்லாத படித்த இளஞ்சமுகத்தினரின் தொகை அதிகரித்துக் கொண்டு வருகின்ற மறுபுறத்தில் தொழில்தருனர்களின் திறனுள்ள தொழிலாளர்களுக்கான கேள்வியும் அதிகரித்துக் கொண்டு வருகின்றமை நாட்டிற்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையினை படிப்படியாக மாற்றுவதனை நோக்கமாகக் கொண்டு அமைச்சு மட்டத்தில் தேசிய மனிதவள அபிவிருத்திச் சபையினரால் தொழில் சந்தை மற்றும் தொழில் வழிகாட்டல் நிகழ்வு மாவட்ட மட்டத்தில் ஒழுங்கு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதல்கட்டமாக இந்த நிகழ்வினை கிழக்குப் பல்கலைக்கழத்துடன் இணைந்து நடாத்துவதற்கான முதல்கட்ட கலந்துரையாடல் அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எப்.சி.ராகல் அதேபோன்று சிரேஸ்ட்ட விரிவுரையாளர்களான எ.அன்று மற்றும் சு.ஜெயப்பிரபா ஆகியோர் யு.வி.எல் சார்பாக கலந்துகொண்டு திங்கட்கிழமை (04) கலந்துரையாடினர்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களுடன் உயர்தரம் படித்துவிட்டு தொழில் மற்றும் கல்வியினை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத இளைஞர்களும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என உபவேந்தர் வேண்டிக் கொண்டார். அத்துடன் இந்த நிகழ்வினை அந்தப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடாத்த எல்லா வகையான உதவிகளையும் செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்த வேலையின்மை நிலையினை கருத்தில் கொண்டு தொழில் தருனர்களை தொழில் தேடுபவர்களுடன் ஒன்றிணைத்து இரு தரப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்கான ஒரு திட்டமாக இதை முன்னெடுக்க உள்ளோம். அத்துடன் கல்வி பயிற்சி நிறுவனங்களையும் இங்கு ஒன்றிணைப்பதன் மூலம் திறனுள்ள தொழிற்படையினை உருவாக்கி இந்த சவாலினை முறியடிப்பதே எமது இத்திட்டத்துக்கான நோக்கம் எனவும் இங்கு அமைச்சில் இருந்து கலந்துகொண்ட உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஆய்வு உத்தியோகத்தருமான த.செந்தில்நாதன் அவர்களும் கலந்துகொண்டார்.

இந்த திட்டம் மார்ச் மாத ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதுடன், இத்திட்டத்தினை சிறப்பாக நடாத்த ஊடகத்துறையினர் உட்பட அனைத்து துறையினரதும் ஒத்துளைப்பும் வேண்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: