31 Jan 2019

பாற்பண்ணையாளர்களை ஊக்குவிக்க அவுஸ்ரேலியாவிலிருந்து கொண்டுவரப்படும் நல்லின கறவைப் பசுக்கள் வழங்க திட்டம்.

SHARE
பாற்பண்ணையாளர்களை ஊக்குவிக்க அவுஸ்ரேலியாவிலிருந்து கொண்டுவரப்படும் நல்லின கறவைப் பசுக்கள் வழங்க திட்டம்.
பாற்பண்ணைளாயர்களை ஊக்குவிப்பதற்காக வேண்டி நல்லின் கறவைப் பசுக்களை அரைவாசி மானிய அடைப்படையில் அவுஸ்ரேலியாவிலிருந்து இறக்குமதி செய்து வழங்கப்படவுள்ளன. இது சம்மந்தமாக பண்ணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் வியாழக்கிழமை (31) மட்டக்களப்பு தும்பங்கேணியில் அமைந்துள் அமுதசுரபி பால் பதநிடும் நிலையத்தில் இடம்பெற்றது.

போரதீவுப்பற்றுப் பிரதேச கல்நடை கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சின் இத்திட்டத்திற்கான கிழக்கு மாகாண இணைப்பாளர் தயாரெட்ன, இத்திட்டத்தின் உயர் அதிகாரிகள், பாற்பண்ணையாளர்கள், மற்றும் கற்றநெசனல் வங்கியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் பாற்பண்ணைகளை முன்னேற்றுவதற்காக கிராமிய பொருளாதார அமைச்சின் ஊடாக  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பாற்பண்ணைக் கைத்தொழிலில் ஆர்வமுள்ள தொழில் முயற்சியாளர்கள், உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம். இதற்றாககா வேண்டி அருகிலுள்ள பிரதேச, அல்லது மாவட்ட கால்நடை மருத்துவ பணிமனைகள், மற்றும் மாவட்ட செயற்றிட்ட அலுவலகங்கள் மூலம் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். 

இதன்போது 465000 ரூபா பெறுமதியான ஒரு நல்லின அவுஸ்ரோலியா கறவைப் பசுவை 200000 ரூபாவுக்கு பண்ணையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிராமிய பொருளாதார அமைச்சின் இத்திட்டத்திற்கான கிழக்குமாகாண இணைப்பாளர் தயாரெட்ன இதன்போது தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: