21 Jan 2019

புடைப்புழுவின் தாக்கதினால் சோளன் பயிர்ச் செய்கையை அடியோடு கைவிட வேண்டிய நிலை

SHARE
புடைப்புழுவின் தாக்கதினால் சோளன் பயிர்ச் செய்கையை அடியோடு கைவிட வேண்டிய நிலை
சோளன் பயர்ச் செய்கையில் இவ்வருடம் என்றுமில்லாத அளவிற்கு படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதனால் தமது வாழ்வாதாரத்தை அடியோடு இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேட்டு நிலப் பயிற் செய்கைக்குப் பெயர்போன படுவாங்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் சேனைப் பயிர் செய்கைகளில் வருடாந்தம் ஈடுவபட்டு வருவது வழக்கம் அதுபோல் இவ்வருடமும் தமது சேனைப் பயிர் செய்கையில் பிரதான இடம் வகிக்கின்ற சோளன் பயிரில் என்றுமில்லாத அளவிற்கு படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இவற்றால் தாம் இப்பயிருக்கு முதலீடு செய்த பணத்தைக் கூட அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் பெறமுடியாதுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்னறர். 

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்தில் சோளன் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும் என அப்பகுதி விவகாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்

SHARE

Author: verified_user

0 Comments: