27 Dec 2018

பெரும்போக வேளாண்மைச் செய்கையில் கபிலநிறத் தண்டுத் தத்தியின் தாக்கும் அதிகம்.

SHARE

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்பொக வேளாண்மைச் செய்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கபிலநிறத் தண்டுத்தத்தியின் தாக்கும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியில் மழை நீரை நம்பி மேற்கொள்ளப்படும் பெரும்போக வேளாண்மைச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வருடம் வேளாண்மைக்கு மஞ்சள் நிற ஒருவித நோயும், அதிகளவு களைகளும், காணப்பட்டும் அNது வேளை வேளைண்மைச் செய்கையை அழிக்கும் பாரிய நோயாகக் காணப்படும் கபிறநிறதத் தண்டுத்தத்தி (அறக்கொட்டி) யின் தாக்கம் அனைத்து வயல் நிலங்களிலும் காணப்படுகின்றது.

இப்பூச்சி இனத்தை இல்லாதொழிப்பதற்காக பலவகையான கிருமிநாசினிகள் பாவித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. இதனால் விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக படுவாங்கரைப் பகுதிவாழ் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: