3 Dec 2018

வயிற்று வலியால் துடித்த க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவன் சத்திர சிகிச்சையின் பின் பரீட்சைக்கு தோற்றினார்.

SHARE
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் ஒருவர் அம்பாறை மாவட்டம் கல்முனை அஷரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வயிற்றுவலியினால் அனுமதிக்கப்பட்ட நிலையில் சத்திர சிகிச்சை நிபுணர் மொகமட் சமிம் அவர்களின் முயற்ச்சியின் பலனாக குறித்த மாணவனுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு திங்கட் கிழமை (03) ஆரம்பமான கல்விப் பொதுத்தர சாதாரண தர பரீட்சைக்கு குறித்த மாணவன் பரீட்சைக்கு தோற்றியுள்ளார். 
இது குறித்து வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் தனது முகப் புத்தகத்தின் வாயிலாக பெற்றோர்கள் பரீட்சைக் காலங்களில் மாணவர்களின் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் இவ்வாறாக குறிப்பிட்டுள்ளார்.

வலது பக்க அடி வயிற்று நோவுடன் காலத்தை வீணாக்காதீர்கள், பரீட்சைக் காலங்களில் பிள்ளைகளுக்கு வயிற்று நோவுகள் வரும் போது பெற்றோர்கள் , பிள்ளைகள் ளுவசநளள னால் சொல்கிறார்கள் என்று கனயீனமாக இருப்பதுண்டு அல்லது பிள்ளை கட்டாயம் பரீட்சை எழுத வேண்டுமென்று உயிராபத்து வரும் நிலையிலும் கவனயீனமாக இருப்பதுமுண்டு. 

சிறந்த உதாரணமொன்றை படிப்பினைக்காக கூறலாம் என்று நினைக்கின்றேன். 

சாதாரண தர பரீட்சையை எழுதவிருக்கும் மாணவனொருவன் வலது பக்க அடிவயிற்று நோவுடன் வந்த போது உடனடியாக சத்திர சிகிச்சையை செய்ய வேண்டும் என்று நான் கூறியதற்கு சத்திரசிகிச்சை என முடிவுக்கு வந்த பெற்றோர்கள் அவர்களுடைய அனுமதியை எழுத்து மூலம் வழங்கி சத்திரசிகிச்சையின் பின்பு ஆனந்தமடைந்தனர். 

வயிற்றினுள் குடல் வளரி வீங்கி வெடிக்கும் அளவிற்குக் காணப்பட்டது. 

சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து மாணவனும் சுகமாய் பரீட்டை பரீட்சைக்கும் ஆயத்தமாகின்றார். ஆகவே யிpநனெiஉவைளை என்று உழகெசைஅ ஆனால் தயவுசெய்து ளுரசபநசல க்கு உட்படுத்துவது சிறந்தது
வெடித்தால் உயிருக்கு ஆபத்து 

எனவே மாணவர்களுடைய கல்வி உடல் சுகாதாரம் தொடர்பில் பொற்றோர்கள் அக்கறையுடன் இருக்க வேண்டுமென அவருடைய முக நூல் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளதுடன்.  சத்திர சிகிச்சை நிபுணர் அவர்களின் திறைமைக்கும் முயற்சிக்கும் பலரும் நன்றிகளும் பாராட்டுக்களையும் பலர் தெரிவித்து வருவதுடன் இவர் அண்மைக்காலங்களில் பல சிறந்த சத்திர சிகிச்சைகளையும் மேற்கொண்டு வெற்றி கண்டமையும் குறிப்பிடத்தகது. 




SHARE

Author: verified_user

0 Comments: