22 Dec 2018

புதிய அமைச்சரவையில் இடம்பிடித்த அமைச்சர்களின் விபரம்

SHARE
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில்  வெள்ளிக்கிழமை(21) தினம் அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள் 03 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 17 பேரும், பிரதி அமைச்சர்கள் 07 பேரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவியேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. .
இதற்கமைய இன்றைய தினம் பதவியேற்றுக்கொண்டவர்களின் விபரங்கள்...
அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள்
01. ஹர்ஷ த சில்வா - மறுசீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்
02. அஜித் பீ.பெரேரா - டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழிநுட்ப அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்
03. சுஜீவ சேமசிங்க - விஞ்ஞான தொழிநுட்ப, ஆராய்ச்சித் துறை அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள்.,
01. ரஞ்சன் ராமநாயக்க - நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.,
02. விஜயகலா மகேஸ்வரன் - கல்வி இராஜாங்க அமைச்சர்.,
03. ஜே.சீ.அலவத்துவல - உள்ளக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
04. இரான் விக்ரமரத்ன - நிதி இராஜாங்க அமைச்சர்
05. ரஞ்சன் அலுவிஹார - சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
06. வசந்த அலுவிஹார - விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
07. லக்கி ஜயவர்தன - நகர திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர்
08. நிரோஷன் பெரேரா - தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
09. ருவன் விஜேவர்தன - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.,
10. சம்பிக்க பிரேமதாச - மின்சக்தி, மீள் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி இராஜாங்க அமைச்சர்,
11. அசோக்க அபேசிங்க - போக்குவரத்து சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர்,
12. பைசல் காசிம் - சுகாதார போசனை, சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர்,
13. எச்.எம்.எம். ஹரீஸ் - மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்,
14. அமீர் அலி - விவசாய, நீர்ப்பாசன, கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்,
15. திலிப் வெதஆரச்சி - மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்,
16. ஏ.இசட்.எம். செயிட் - சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்,
17. வடிவேல் சுரேஷ் - பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்,
பிரதி அமைச்சர்கள்
01. அனோமா கமகே - பெற்றோலிய வள அபிருத்தி பிரதி அமைச்சர்,
02. எட்வட் குணசேகர - காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அலுவல்கள் பிரதி அமைச்சர்,
03. நளின் பண்டார ஜயமகா - அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை பிரதி அமைச்சர்,
04. அஜித் மான்னப்பெரும - சுற்றாடல்துறை பிரதி அமைச்சர்
05. கருணாரத்ன பரனவிதான - திறன் விருத்தி, தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர்,
06. புத்திக பத்திரன - கைத்தொழில், வாணிப அலுவல்கள் பிரதி அமைச்சர்,
07. பாலித குமார தெவரப்பெரும - சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர், 
SHARE

Author: verified_user

0 Comments: