8 Dec 2018

படைப்புழுவின் தாக்கத்திலிருந்து பாதுகாத்தல் தொடர்பில் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு.

SHARE
இலங்கையில் மறு வயற் பயிற் செய்கையான சோளன் பயிர் செய்கையில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குள் உள்நுளைந்த அந்நிய நாட்டுப் பீடையான படைப்புழுவின் தாக்கத்திலிருந்து, விவசாயிகளைப் பாதிப்பதற்காக விவசாயிகளின் நன்மைகருதி விவசாயத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட காதியாலயத்தின் காஞ்சிரங்குடா பிரதேச விவசாயப் போதனாசிரியர் ப.சகாப்தனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மத்தி வலய விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ்.எம்.சலீமின் ஒழுங்குபடுத்தலோடு, மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராசாவின் தலைமையில் மாபெரும் விழிப்பூட்டல் நிகழ்வொன்று  வெள்ளிக்கிழமை (07) சாமந்தியாறு எனும் இடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்குமாகாண விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், கிழக்கு மாகாணத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஆர்.ஹரிகரன்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதோடு,  மேலும் இந்நிகழ்வில் பழுப்புடைப் புழுவின் தாக்கம் தொடர்பிலும், அதனைக் கட்டுப்படுத்துதல் தொடர்பிலும், பூரண விளக்கங்களை பத்தலக்கொட நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவன ஆராச்சி உத்தியோகஸ்த்தர் றோகன திலகசிறி வழங்கினார்.

மேலும் இதன்போது மாவட்ட பாடவிதான உத்தியோகஸ்த்தர், விவசாயப் போதனாசிரியர்கள், உள்ளிட்ட பலரும் கலந்த கொண்டு விவசாயிகளுக்கு விளக்கமளித்ததோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் பொருட்டு மானிய அடிப்படையில் இராசாயன வகைகள் வழங்கும் பொருட்டு இதன்போது கலந்து கொண்ட செயலாளரினால் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 








SHARE

Author: verified_user

0 Comments: