1 Nov 2018

மரித்த விசுவாசிகளின் தின அனுஷ்டிப்புக்குத் தயார் நிலையில் ஆலையடிச்சோலை மயானம்.

SHARE
மரித்த விசுவாசிகளின் தின அனுஷ்டிப்புக்கு ஏற்றதாக மட்டக்களப்பு ஆலையடிச்சோலை மயானம் துப்புரவு செய்யப்பட்டு தயார் நிலையில்   உள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான அ. கிருஜன் மற்றும் இரா. அசோக் ஆகியோர் தெரிவித்தனர்.
நொவெம்பெர் 02ம் திகதி மரித்த விசுவாசிகளினுடைய தினம் கத்தோலிக்க திருச்சபையினால் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மரித்த  அனைவரதும் நினைவாக இத்தினத்தில் திருப்பலிப் பூசைகள் மற்றும் வழிபாடுகள் என்பனவும் இடம்பெறும் இந்நிகழ்வில் மதகுருமார்களும், மரித்த விசுவாசிகளின் உற்றார் உறவினர்களும் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வை அனுஷ்டிப்பதற்கு உதவும் முகமாக மட்டக்களப்பு ஆலையடிச்சோலை மயானத்தைத் துப்புரவு செய்து தருமாறு புளியந்தீவு மற்றும் புதூர் பிரதேச மக்கள் வேண்டுகோள் மாநகரசபை உறுப்பினர்களான அ. கிருஜன் மற்றும் இரா. அசோக் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதற்கமைவாக புதர்கள் அடர்ந்த நிலையில் காணப்பட்ட இந்த மயானம் மாநகரசபை முதல்வரின் வழிகாட்டலின் கீழ் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.

SHARE

Author: verified_user

0 Comments: