24 Oct 2018

கிழக்கு மாகாணத்தில் சமூக இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் மூவின மாணவர்களும் ஒன்றுகூடும் ” சகோதர சங்கமம் ” நிகழ்ச்சி

SHARE
இனங்களுக்கடையில் நல்லுறவையும் பரஸ்பர ஒற்றுமையையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம்  ஜீ.ரீ.இஸட்டின் சமூக இசைவுக்கான கல்விப் பிரிவினூடாக மாணவர் உறவுப் பரிமாற்ற திட்டத்திற்கு இசைவாக ஒழுங்கு செய்துள்ள மூவின மாணவர்களும் ஒன்றுகூடும் ” சகோதர சங்கமம் ” நிகழ்ச்சி எதிர்வரும் 26 வெள்ளிக்கிழமை மாலை முதல் 29 ஆம் திகதி திங்கட் கிழமை காலை வரை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி, மருதமுனை ஸம்ஸ் மத்தியகல்லூரி ஆகியவற்றிலிருந்து முஸ்லிம் மாணவ மாணவிகளும் , பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் இருந்து  இந்து ,  கிருஸ்தவ மாணவ மாணவிகளும்  அம்பாறை சேனாகம மகா வித்தியாலயத்திலிலுருந்து சிங்கள மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் பங்கேற்கவுள்ளனர்.

பல்லின சமூகத்தைக் கொண்ட எமது நாட்டில் ஒவ்வொருவரும் தாம் சார்ந்த இன, மத, மொழி, கலை, கலாசார அம்சங்களில் பற்றுவைத்து பெருமிதம் கொள்ளும் அதே வேளை மற்றையோரின் இன, மத, மொழி, கலை, கலாசார அம்சங்களை அறிவதுடன் அவற்றை மதிக்கவும் பழகிக்கொள்ள வேண்டும்  என்ற எண்ணக்கருவை பாடசாலை மாணவர்களிடையே விருத்தி செய்து நாட்டின் சமூக  இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: