26 Oct 2018

மத்திய கிழக்கு சென்று திரும்பிய பெண்களை திருமணம் செய்ய ஆண்கள் தயாரில்லை. மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் ஏ.எம்.எம்.அஸிஸ்

SHARE
ஜீவனோபாயத்துக்கு வழியில்லை என்பதற்காக வெளிநாடு சென்ற பெண்களுடன் கையடக்கத் தொலைபேசியில் இரவு வேளைகளில் சல்லாபமடிப்பதற்கு ஆண்கள் ஆயத்தம். திருமணம் முடிப்பதற்கு முடியாது. அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற பெயர் வெளிநாட்டுக் கேஸ் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் ஏ.எம்.எம்.அஸிஸ் தெரிவித்தார்.
நுண்கடனால் சம காலத்தில் எதிர்நோக்கும் பாதிப்புக்களும் சவால்களும் சம்பந்தமான விழிப்புணர்வும் அனுபவப்பகிர்வும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (26) மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபம் நடைபெற்றது.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வறுமை குறைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். வறுமை என்பது ஒரு மாவட்டத்தின் கணிப்பீட்டின் படி குறைவாக இருந்தாலும், அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கின்ற விலையேற்றத்தின் காரணமாக காலையில் எழுந்தவுடன் பிரச்சினை.

சீனிக்கான விலையேற்றம், பால்மா விலையேறறம், பெற்றோலக்கான விலையேற்றம். விலையெற்றம் விலையேற்றம் என்று அதிகரித்துக் கொண்டு செல்கையில், கணவன் மனைவிக்கிடையில் முரண்பாடு, பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

பிளளைகள் கல்வி கற்பதற்காக பிரத்தியேக வகுப்புக்கள் ஒரு வியாபாரம், அந்தப்பிரத்தியேக வகுப்புகளுக்காக எத்தனையொ ஆசிரியர்கள் தயார் படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கின்ற செலவுகள் அதிகரித்திருக்கின்றன.

வறுமையில்லாத மாவட்டமாக இருந்தாலும் முரண்பாடுகள் ஏற்படுவதற்குக்காரணம் இந்தப் பணப்பிரச்சினைதான். இந்தப்பணப்பிரசசினையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றால் என்ன செய்வது, அந்தப்பிரச்சினையை முடிவுக்குக்கொண்டுவரத்தான் அதிகமான பெண்கள் மத்திய கிழக்குக்குச் செல்கிறார்கள்.

அங்கும் பிரச்சினை, வேலைவாய்ப்புகளுக்காகச் சென்ற பெண்கள் அரபு நாடுகளிலிருக்கின்ற முதலாளிமாருடன் ஏற்படுகின்ற பிரசசினைகள் காரணமாக சக்கர நாற்காலிகளில் வந்தார்கள், ஆணி அடித்து வந்தார்கள், எத்தனையோ பெண்கள் கற்பை இழந்து வந்தார்கள். இப்படியான பிரச்சினைகள் சமூகத்தின் மத்;தியில் உளளடக்கப்பட்டிருக்கின்றன.

உழைப்புக்காகச் சென்ற பெண்களை எத்தனை ஆண்கள் திருமணம் முடிப்பதற்குத்தயாராக இருக்கின்றார்கள் என்றால்அது குறைவு. அந்தப் பெண்களுடன் கையடக்கத் தொலைபேசியில் சல்லாபமடிப்பதற்கு ஆண்கள் ஆயத்தம். இரவு வேளைகளில் சல்லாபமடிப்பதற்கு ஆணகள் தயார். திருமணம் முடிப்பதற்கு முடியாது. ஏனென்றால் அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற சொல் வெளிநாட்டுக் கேஸ். கணவனும் உழைக்கின்றார் இல்லை. அன்றாட ஜீவனோபாயத்துக்கு வழியில்லை என்பதற்காகச் சென்று வந்தால் வெளிநாட்டுக்கேஸ். 

இந்த நுண் கடன் வழங்குகின்ற நிறுவனங்கள் கொள்ளை லாபம் எடுக்கின்ற நிறுவனங்களாக இருககின்றன. இந்தக் கொள்ளை லாபம் என்று சொல்கின்ற போது இரண்டு விதமான அர்த்தங்கள் இருக்கின்றன. முதலாளிமார் இலகுவான விடயங்களைக் கூறி பிழையான அடிப்படையில் கையெழுத்து வாங்கி, புரியாத பாசை என்று சொல்லப்படுகின்ற ஆங்கில பாiசில் இங்குள்ள பெண்களிடம் 14 - 15 பக்கங்களில் கையெழுத்து வாங்கிவிட்டு கடனை அல்லது பொருள்களைத் தருகிறார்கள். கடைசியில் அது எந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கிறதென்றால், அவற்றுக்கு வட்டிவீதம் பற்றி அவர்களுககுத் தெரியாது, அவர்கள் வாங்கிய தொலைக்காட்சி உடைந்துவிடும் ஆனால் கடன் முடியாது. கடனைத் தேடி வருகின்ற ஆண்கள் பலருக்கு களளத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றது இது எதனால் ஏற்பட்டது. இதில் மாற்றம் ஏற்பட வேண்டும். பெண்களாகிய உங்களால் அனைத்தும் முடியும்.

மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட   இணைப்பாளர் திருமதி இந்திரன் ஜெயசீலி தலைமையில் இவ் விழிப்புணர்வு நடைபெற்றது.

இதில், பட்டிப்பளை, வெல்லாவெளி, கிரான், வவுணதீவு, வாகரை, வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

அருவி பெண்கள் வலையமைப்பின் வெளிக்கள உத்தியோகத்தர் க.மோகனலெட்சுமியின் ஆரம்ப உரையுடன், ஆரம்பமான இந்தச் செயலமர்வில், நுண்கடனால் பாதிக்கபபட்ட பெண்கள் சிறுவர்களுக்கான விழிபபுணர்வு தொடர்பில் ஆரையம்பதி பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சித்தி ஜாகிதா ஜலாத்தீன், நுண்கடனால் பாதிக்கபபட்டவர்கள் அதில் இருந்து மீளுவதற்கான வழிகாட்டலும் ஆலோசனையும் குறித்து பெண்கள் அபிவிருத்தி திருமதி எஸ்.சந்திரவதனி ஆகியோரும் விளக்கமளித்தனர்.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் ஏ.எம்.எம்.அஸிஸ் சம்பவப் பகிர்வு சம்பவ கற்கைகளுடனான ஆலோசனைகளையும் வழங்கினார்.


SHARE

Author: verified_user

0 Comments: