23 Oct 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைப் பாதுகாப்புக்கென அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை களவாடுதல் மற்றும் சேதப்படுத்தலால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைப் பாதுகாப்புக்கென அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை களவாடுதல் மற்றும் சேதப்படுத்தலால்  பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது என்பதுடன் இது ஒரு கண்டிக்கத்தக்க  செயற்பாடு என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் செவ்வாய்க் கிழமை (23) தெரிவித்துள்ளார். 
மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர்; பிரிவுக்குட்பட்ட கற்பானைக் குளம், மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கித்துள் ஆகிய பிரதேசஙகளில் அமைக்கப்பட்டிருந்த யானை வேலிகள் கடந்த சில தினங்களுக்குள் களவாடப்பட்டுள்ளன.

மக்களை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்படுகின்ற வேலிகள் சேதப்படுத்தப்படுதல் மற்றும் களவாடப்படுவதனால் மக்களே பாதிப்புக்களை எதிர் கொள்வர். 

இந்த வேலிகள் களவாடல் செயற்பாடுகளை அடுத்து சிவில் பாதுகாப்புப் படையினரை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து பொது மக்கள் விழிப்பாக இருக்க வேணடும் என்பதுடன் இவற்றினைப் பாதுகாப்பதும் பொது மக்களின் கடமையாகும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: