25 Oct 2018

“முரண்பாடுகளைத் தீர்க்குமாறு முடிந்தவரை சொல்லிப் பார்ப்போம் சாதகமான முடிவு வராவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிப்போம்”

SHARE
மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்டார்லின்
கல்விச் சேவைகளிலுள்ள முரண்பாடுகளைத் தீர்க்குமாறு நாம் முடிந்தவரை சொல்லிப் பார்ப்போம் அதில் எமக்கு சாதகமான முடிவுகள் வராவிட்டால் எமது தொழில் சங்க நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்டார்லின்  தெரிவித்தார்.
நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று  இலங்கை ஆசிரியர் சங்கத்தின்; ஏற்பாட்டில்  புதன்கிழமை 24.10.2018 மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியில் இடம்பெற்றது.

மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தலைமையில் இடம்பெற்ற தெளிவூட்டும் இக்கருத்தரங்கில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்டார்லின் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தவுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
மகாண கல்விப் பணிப்பாளர் ஒருவரை எவ்வாறு நியமிப்பது என்பது பற்றி கல்வி நிருவாக சேவை பிரமாணக் குறிப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது,
ஆனால் தற்போது நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண கல்லிப் பணிப்பாளர் நியமனத்தில் இவை ஒன்றுமே பின்பற்றப்படவில்லை.  

கல்வி நிருவாக சேவை பிரமாணக் குறிப்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவிலிருந்து மூவரும், ஆளுனர் நியமிக்கும் அதிகாரி ஒருவருமாக நான்குபேர் கொண்ட குழு அமைத்து அதன் மூலம் நேர்முகத் தேர்வு நடாத்தி மாகாண பணிப்பாளர் தெரிவுசெய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரை நியமனம் செய்தது பிழையான நடவடிக்கையாகும்.

யாராக இருந்தாலும் கல்வி நிருவாக சேவை பிரமாணக் குறிப்புக்கு அமையவே நிருவாகம் இடம்பெற  வேண்டும்.

இவ்வாறான பிழைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்டி கேட்டவேண்டிய பொறுப்பும் கடமையும் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு உள்ளது.

எமது தொழிற்சங்கம் அவ்வாறில்லாமல் சுயமாக  தொழிலாளர்களின் நலனுக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் இயங்கும் சங்கமாகும்.

பாடசாலைகளில் கைவிரல் அடையாளம் இடல்  தொடர்பில் இங்கு பேசப்பட்டது, சில பிரதேசங்களில் இது ஒரு பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள் கைவிரல் அடையாளம் இடும் முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

கல்வி அலுவலகங்களில் இந்த கைவிரல் அடையாளம் இடும் இயந்திரம் பொருத்தலாம் என சொல்லப்பட்டுள்ளதே தவிர பாடசாலைகளில் கைவிரல் அடையாளம் இடவேண்டும் என சொல்லப்படவில்லை.

இது சில  பாடசாலைகளில்  புதிய புதிய பிரச்சினைகளை  உருவாக்கியுள்ளது.
பாடசாலை செல்லும்போது ஆசிரியர்களுக்கு 15 நிமிடம் சலுகைக் காலம் என சுற்றறிக்கையில் உள்ளது, இதுவும் சில பாடசாலைகளில் அனுசரிக்;கப்படுவதில்லை.

கைவிரல் அடையாம் தொடர்பான பிரச்சினையை நாம் ஜனாதிபதியிடமும் மாகாண ஆளுநரிடமும் பேசியுள்ளோம்” என்றார்.

இக்கருத்தரங்கில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்மொழிவுகள், கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட முன்மொழிவுகள், ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பான உயர் நீதி மன்றத் தீர்ப்புக்கள், ஆசிரியர் - அதிபர் பதவி உயர்வுகளும் சம்பள நிலுவைகளும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் எடுத்தாளப்பட்டன.

மேலும், இந்தக் கருத்தரங்கில் பங்குபற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைத்துப் பயனாளிகளுக்கும் 29 பக்கங்களைக் கொண்ட சம்பள முரண்பாடு தொடர்பான கையேடும் இலவசமாக வழங்கப்பட்டது.



SHARE

Author: verified_user

0 Comments: