11 Oct 2018

கவிக்கோ வெல்லவூர் கோபால் எழுதிய 21 ஆவது நூலான கண்ணகி வழிவாடு - பார்வையும் பதிவும் நூல் வெளியீடு

SHARE
மட்டக்களப்பு தமிழ்ச் சங்க வெளியீட்டில் கவிக்கோ வெல்லவூர் கோபால் எழுத்தில் வெளியாகும் 21 ஆவது நூலான கண்ணகி வழிவாடு - பார்வையும் பதிவும் நூலின் வெளியீடு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு தமிழ்ச் சங்கததின் தலைவர் சைவப் புரவலர் வீ.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இவ்வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.

இவ் நூல் வெளியீட்டில், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி ப.புஸ்பரெட்ணணம், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் தமிழ்ப் பேராசிரியர் கலாநிதி வே.மகேஸ்வரன், கிழக்கு மாகாண காணி, வீதி அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் க.கருணாகரன், பேராதனைப் பல்கலைக்கழக செயற்பாட்டு முகாமைத்துவத் துறைத் தலைவர் கலாநிதி சி.மகேஸ்வரன், கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட முன்னாள் பீடாதிபதி கலாநிதி கே.ராஜேந்திரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் பிரதியை உள்நாட்டு இறைவரித்திணைக்கள ஆணையாளர் சட்டத்தரணி மு.கணேசராஜா பெற்றுக்கொண்டார்.

கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி க.நாராயணப்பிள்ளை, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட உதவிப்பதிவாளர் சி.சிவகுமார், கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் கே.சிவகணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூல் நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் நா.வாமன் நிகழ்த்தினார்.
















SHARE

Author: verified_user

0 Comments: