8 Jun 2018

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சொஞ்சிலுவைச் சங்கத்தினால் நடவடிக்கை முன்னெடுப்பு.

SHARE
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கைச் செஞ்சிலுவை; சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட கிராமங்கள் தோறும் செஞ்சிலுவைத் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தும், சுற்றுச் சூழலை அவதானித்தும் விழிப்புணர்வு நடவடிக்கையை முன்நெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (04) மட்.பட்.சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது அப்பிரதேச சுகாதார பரிசோதகர்கள், சொஞ்சிலுவைத் தொண்டர்கள், கல்விச் சமூகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் இதன்போது இணைந்திருந்தனர்.

பாடசாலைக் சூழலை டெங்கு நுளம்புகள் பரவாமலிருக்க எவ்வாறு பேணுவது, மாணவர்கள் பாடசாலையிலும், வீடுகளிலும் மேற்கொள்ள வேண்டிய சுகாதர நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன். இறுதியில் பாசாலை வளாகமும் சிரமதானம் மூலம் தப்பரவு செய்யப்பட்டது.











SHARE

Author: verified_user

0 Comments: