21 Jun 2018

சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கும் நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு

SHARE
கைத்தொழிற்சாலைகளுக்கு மட்டக்களப்பு மாநகர சபையினால்  சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கும்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் பற்றி விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை 20.06.2018 நடைபெற்றது.
1533ஃ16 ஆம் இலக்க 2008 ஆம் ஆண்டிற்கான வர்த்தமானி அறிவுறுத்தலுக்கிணங்க கைத்தொழிற்சாலைகளின்; செயற்பாடுகளுக்கு ஏற்ப 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் வழங்கப்படுகின்றன.

முதல் இரு பிரிவுகளுக்கும் உரிமம் வழங்கும் அதிகாரம் மாவட்ட சுற்றாடல் அதிகார சபைக்கும் மூன்றாவது பிரிவுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் மட்டக்களப்பு மாநகர சபைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அறிக்கைக்கு இணங்க மாநகர சபை 3 வருடங்களுக்கு குறித்த உரிமத்தை தொடராக வழங்குகின்றது.

மக்கள் அடர்த்தியாக வாழும் நகர்ப்புறங்களில் கைத்தொழிற்சாலைகளுக்கான சூழல் பாதுகாப்பு உரிமம் 3 வருடங்களுக்கு தொடராக வழங்காமல் ஒவ்வொரு வருடமும் பொதுச் சுகாதார பரிசோதகரின் கள அறிக்கையினைப் பரிசீலனை செய்து உரிமம் வழங்கப்பட வேண்டும் என மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தனிநபர் பிரேரணையைக் கொண்டு வந்த விடயத்தைத் தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு பிரதேச சுற்றாடல் அதிகாரி கே. லோகராஜா பொதுச் சுகாதார பரிசோதகரின் கள அறிக்கை 3 மாத கால இடைவேளைகளில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு தகுதியான தொழிற்சாலைக்கு மட்டும் உரிமம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதன்போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முகம் கொடுக்கும் சவால்களும் அவற்றுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

மாநகர ஆணையாளர் என். மணிவண்ணன், பிரதி ஆணையாளர் என். தனஞ்செயன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் மாநகர சபையின் வருமானப் பரிசோதகர்கள் கலந்து இந்த விளக்கமளிப்பு செயலமர்வில் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: