13 Jun 2018

சூறைக் காற்றினால் தீ பரவி குடிசை எரிந்து நாசம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப ஒரு சில நாட்களாக வீசி வரும் பலத்த கச்சான் காற்றினால் (தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று) மரக் கிளைகள் முறிந்து விழுவதும் புழுதி வாரி இறைக்கப்படுவதும் நிகழ்ந்து வருகின்றது.
செவ்வாய்க்கிழமை 12.06.2018 நண்பகலவில் வீசிய பலத்த அனல் வெப்பக் காற்றினால் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை தமிழ்ப் பிரிவு 10ஆம் குறுக்கில் ஓலைக் குடிசை ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

தான் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென வீசிய சூறைக் காற்றினால் குடிசை தீப்பற்றியதாக சபாபதிப்பிள்ளை கோமளம் (வயது 57) தெரிவித்தார்.

அவ்வேளையில் அக்கம்பக்கதிலுள்ளவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததாகவும் அவர் கூறினார்.

கூலித் தொழில் செய்து ஜீவனோபாயம் நடத்தும் தான் மிகுந்த வறுமை நிலையிலுள்ளதாகவும் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மகள் உட்பட இரண்டு பெண்மக்களுடனும் தானும் குடும்பமும் இந்தக் குடிசையில் வசித்து வருவதாகவும் அவர் கூறினார்.



SHARE

Author: verified_user

0 Comments: