28 May 2018

ஆலயங்கள் வழிபாட்டுக்குரிய இடங்களாக மாத்திரமின்றி சமூக நோக்குடன் செயற்படுகின்ற நிறுவனங்களாக மாறவேண்டும்.

SHARE

எமது ஆலயங்கள் வழிபாட்டுக்குரிய இடங்களாக மாத்திரமின்றி சமூக நோக்குடன் செயற்படுகின்ற நிறுவனங்களாக மாறவேண்டும். இவ்வாலயத்தில் இவ்வாறு புலமைப் பரிசில்  வழங்கப்படுகின்ற விடையம் மென்மேலும் விரிவாக்கப்டவேண்டும். திருகோணமலையில் தம்பலகாமத்தில் அமைந்துள்ள ஆதிகோணேஸ்வரா ஆலயத்திற்கு 350 இறகு;கு மேற்பட்ட காணிகள் சொந்தமாக இருக்கின்றது. வருடாந்தம் அதிகளவு வருமானம் அந்த ஆலயத்திற்கு கிடைக்கப்பபெறுகின்றது.ஆனால் அங்கு இந்தசமூக நோக்கு இல்லை இதனை அந்த ஆலய நிருவாகத்திடம் எடுத்துக்கூறியுள்ளேன். இவ்வாறான சமூக செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அவர்கள் உடன்பட்டிருக்கின்றார்கள்.எனவே ஆலயங்கள் மூலம் கடைக்கின்ற வருமானம் கல்விக்காக கட்டாயம் வழங்கப்பட வேண்டும். என கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தினால் நடாத்தப்பட்ட வருடாந்த புலமைப் பரிசில்கள் வழங்குதலும், கௌரவிப்பு நிகழ்வும் மேற்படி ஆலய முன்றலில் ஞாயிற்றுக் கிழமை (27) அலய பரிபாலன சபைத் தலைவர் பா.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது முதன்மை அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

எமது இந்து சமயத்தைச சேர்ந்தவர்கள் நாளாந்தம் வேறு மதங்களுக்கு மாறிக் கொண்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அவதானிக்க முடிகின்றது. வாகரை, கதிரவெளி, பால்சேனை, போன்ற இடங்களிலுள்ள மக்கள் நளாந்தம் ஏனைய மதங்களுக்கு மாறிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான விடையத்தை எமது புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும். எமது சமயத்தில் சமூக நோக்குப் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கின்றது. 

சங்காரவேல் பௌண்டேசன் எனும் அமைப்பு கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவத்துறை, பொறியியல்முறை போன்றவற்றிற்கு பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் கற்றல் முடியும்வரை மாதாந்தம் 10000 ரூபா நிதியை ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதுபோன்று பல உதவிகளையும் கவ்விக்காக உதவி செய்து வருகின்றார்கள். இதுபோன்று முனைப்பு என்றின்ற அமைப்பும் செயற்பட்டு வருகின்றது. நாம் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட காலத்தில் எமக்கு இலங்கை வங்கியினூடாக கிடைந்த கடன் உதவி மாத்திற்கு 125 ரூபா எனக்கு அக்காலத்தில் கிடைக்த்த மொத்த கடன் 9000 ஆயிரம் ரூபா ஆனால் தற்போது மாணவர்களுக்கு கற்றலுக்கு உதவிகளை மேற்கொள்வதற்கு பலர் முன்னின்று செயற்படுகின்றார்கள். இந்நிலையில் எமது ஆலயங்களில் இவ்வாறான விழிப்புணர்வுகள் பொதாது உள்ளது என்கபதை மனவேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் தெரிவுகள் அனைதும் கல்வியாகத்தான் இருக்கின்றது. கல்வியில் முன்னேற்றங்களைக் கொண்டுவந்தால்தான் வாழக்கையில் முன்னேற்றங்களைக் கொண்டுவரலாம். 

எமது சகத்தில் சிலருக்கு பெரிய வசதி வாய்ப்புக்கள் இல்லாமலிருக்கும் ஆனால் வீட்டுக்குள்ளே பெற்றோர் தொலைக் காட்சி பாரத்துக் கொண்டிருப்பார்கள், மறுபன்னம் பிள்ளை பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கும்.நிலையும் காணப்படுகின்றது. ஆனால் ஏனைய சகத்தில் பிள்ரளை பரீட்சைக்குத் தோற்றுமு; காலம் வந்ததும் தொ(ல்)லை காட்சிப் பெட்டியை கட்டி வைத்து விடுகின்றார்கள். அனைவரும் பார்க்கக் கூடிய இடத்தில்தான் கணணியையும் வைப்பார்கள். மாறாக நமது சமூகத்தில் பிள்ளை சாதாரதண தரத்தில் சித்தி பெற்று விட்டால் ஐ போண், லெட்டொப், மோட்டார் சைக்கிள், வாங்கித்தருவேன் என்றுதான் பிள்ளைகளை பெற்றோர்கள் பழக்குகின்றார்கள். நமது சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது. என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: