18 May 2018

மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

SHARE
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடகிழக்கில் பல்வேறு இடங்களில் எழுச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (18) கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் மிக எழுச்சிபூர்வமாகவும், பக்திபூர்வமாகவும் பெருமளவான மக்களின் பங்குபற்றுதலுடனும், தமிழ் உணர்வுடனும் கிரான் பொது மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதித் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் தமிழ் உணர்வாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பக்தி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் ஆரம்பத்தில் கூட்டுப் பிரார்த்தனை, அஞ்சலி ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து விசேட பூசை இடம்பெற்றது. பூசையின் முடிவில் அஞ்சலிச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த அனைத்து உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டியும், தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு வேண்டியும் இறைவணக்கம் செலுத்தப்பட்டது. இறுதியில் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.










SHARE

Author: verified_user

0 Comments: