27 Oct 2017

முதன் முறையாக நடைபெற்ற மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்களால் பக்கப்பார்வைச் செயற்பாடு

SHARE
முதன் முறையாக மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்கள்  கஷ்ர, அதிகஷ்ர பாடசாலைகளில் பாடசாலை பக்கப்பார்வை தயாரிப்பதற்காக விடயம் திரட்டும் நடவடிக்கையில் இரண்டு நாட்கள் (புதன் மற்றும் வியாழன்) ஈடுபட்டிருந்தனர்.
பட்டிருப்பு கல்வி வலயத்தின் கஷ்ர, அதிகஷ்ர பாடசாலைகளை உள்ளடக்கிய போரதீவுக் கோட்டத்தில் 10  பாடசாலைகளில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு பொறுப்பாக வருகை தந்திருந்த விரிவுரையாளர் எம்.ஐ.எம்.ஏ.ஹ{சைன் தெரிவித்தார்.

பாடசாலையில் காணப்படும் நிருவாக நடவடிக்கைகள், கல்வி நடவடிக்கைகள் உள்ளடங்கலான அனைத்துவிதமான நடவடிக்கை முறைகளை மாணவர்கள் இதன்போது இரண்டு நாட்களிலும் ஆய்ந்தறிந்து கொண்டு இறுதியில் பாடசாலை சம்பந்தமான அறிக்கை ஒன்றினையும் தயாரிப்பதன் ஊடாக எதிர்கால ஆசிரியர் என்ற வகையில் பாடசாலை விடயங்கள் பலவற்றை அறிந்து கொள்வதற்காகவே குறித்த நடவடிக்கை முன்னெடக்கப்பட்டு வருகின்றது.

பீடாதிபதி எஸ். இராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டலில் குறித்த நடவடிக்கையில் 207 மாணவர்கள் ஈடுபடுத்தபட்டிருந்தனர்  இணைப்பாளராக உப பீடாதிபதி கல்வித்தர மேம்பாடு கே.துரைராஜசிங்கம் செயற்பட்டிருந்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: