(ஏ.எல்.டீன்பைரூஸ்)
நகரதிட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தில் பூங்கா அமைப்பதற்கென ரூபா 1 கோடி 20 இலட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
நகரதிட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான முபீனின் முயற்சி மற்றும் வேண்டுகோளின் பேரில் இந் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள இப் பூங்கா பெண்களை மையப்படுத்தி அமையவுள்ளது முக்கியமாகும்.
நடைப்பயிற்சிக்கான பாதையுடன் அமையவுள்ள இப் பூங்கா சுற்றுச்சூழல் நட்புறவு தன்மையை மையமாகக் கொண்டு அமையவுள்ளது.
ஆற்றங்கரையோடு சேர்ந்த நீரியல் அம்சங்களும் உள்ளடங்கிய வகையில் அமையவுள்ள இப்பூங்கா தொடர்பிலான ஆரம்பகட்ட சந்திப்புகளை இணைப்புச் செயலாளர் முபீன் காத்தான்குடி பிரதேச செயலாளருடனும் காத்தான்குடி நகரசபை ஆணையாளருடனும் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியதுடன் இத்திட்டம் தொடர்பில் கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இத்திட்டத்திற்கான திட்டமிடலை மேற்கொள்வதன் பொருட்டு காத்தான்குடி நகரசபையின் திட்டமிடல் பிரிவு நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் வழிகாட்டலில் கொழும்பில் அமையப்பெற்றுள்ள பூங்காங்களை பார்வையிட விரைவில் செல்லவுள்ளமையின் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment