5 Oct 2015

வெல்லாவெளி பிரதேச செயலகத்தை பூட்டியும், பிரதான வீதியை வழிமறித்தும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதச செயலகத்தின் வாயிற் கதவை பூட்டியும், மண்டூர் – மட்டக்களப்பு பிரதான வீதியை வழிமறித்தும், போரதீவுப்பற்று பிரதேச பொதுமக்கள் இன்று திங்கட் கிழமை (05) ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்டனர்.

இப்பிரதேசத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் காட்டு யானைகளின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போரதிவுப்பற்று பிரதேசத்திலுள்ள சுமார் 30 கிரமாரங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மண்டூர் – மட்டக்களப்பு பிரதான வீதியை வழிமறித்து, பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களை பிரதேச செயலக வளாகத்திற்கு உள்நுளைய விடாமல் அரசாங்க அதிபர் உரிய இடத்திற்கு வருகைதந்து காட்டு யானைகளை விரட்டுவதற்குரயி நிரந்தர தீர்வை பெற்றுத்தரும் வகையில் தாம் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அரசியல்வாதிகளே காட்டுயானையின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள், துரத்து, துரத்து காட்டுயானைகளைத் துரத்து, அரச அதிபரே காட்டுயானையின் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பாற்று, பிரதேச செயலாளரே காட்டுயானையின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள், போன்ற வாசங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும், காட்டு யானைகளின் தாக்குதல்களினால் மரணமடைந்தவர்களின், புகைப்படம் தாங்கிய பதாகைகளையும், தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விடத்திற்கு வருகைதந்த போரதீவுப்பற்று பிரதச செயலாளர், என்.வில்வரெத்தினம், வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி ரசிக்க சம்பத் ஆகியோர் ஆர்ப்பாட்டக் காரர்ககளுடன் கலந்துரையாடி தமக்குரிய தீர்வைப் பெற்றுத்தருவோம் என உறுதியளித்த போதிலும் கடந்த காலங்களில், இதுபோன்ற பல உறுதிமொழிகளால் தாம் தொடரந்து ஏமாற்றப்பட்டு வருவதால் தற்போது இவ்விடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் வருகை தந்து எமது பாரி பிரச்சனையாகவுள்ள காட்டுயானைகளின் தொல்லைகளுக்கு தீர்வு பெற்றுத்தராத விடத்து தாம் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.

மிக அண்மைக் காலமாக இப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்களும், அட்டகாசங்களும், அதிகரித்துள்ளதோடு, கடந்த ஒருமாத காலப்பகுதிக்குள் 5 போர் மரணமடைந்துள்ளதுடன் 40 இற்கு மெற்பட்ட வீடுகளும். தோட்டங்களும், சேதமாக்கப் பட்டள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். இன்று காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆரப்பாட்டம் தற்போது வரை தொடந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 



















SHARE

Author: verified_user

0 Comments: