16 Dec 2014

மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை மீழுருவாக்கப் படுமா?கட்டுரை

SHARE
மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை மீழுருவாக்கப் படுமா?

 “ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’’  , “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’’ என்றெல்லாம் ஆன்றோர் வாக்குக்குகளில் குறிப்பிடப் பட்டுள்ள இவற்றுக்கு இணங்கினாற்போல் மட்டக்களப்பு வாவியின் அழகையும் , ஏனைய பகுதயில் சுற்றிவர நெல் வயல்களையும், பாலும் தேனும் சொரியும் இயற்கை அழகை தன்னகத்தே கொண்டுள்ளதுதான் மண்டூர் கிராமமாகும்.

மட்டக்களப்பு நகரு
க்கு தெற்கே சுமார் 35கிலோ மீற்றர்  தொலைவில்தான் இக்கிராமம் அமைந்துள்ளது.

மட்டக்களப்பு மாட்டத்தின் சூரியன் மறையும் மேற்குப் பக்கமாக அமைந்துள்ள படுவான்கரை எனும் பெரு நிலப்பரப்பில் போரதீவுப்பற்று பிரதேசத்தில் இக்கிராமம் அமையப் பெற்றுள்ளது.
கிழக்கிலங்கையின் சின்னக்; கதிர்காமம் என்று போற்றப்படுகின்ற மண்டூர் முருகன் ஆலயமும் இந்த ஊருக்கு பெருமை சேர்க்கின்றது. கற்றோர், விவசாயிகளையும் பண்டிதர்களையும், கவிஞர்களையும், ஏன்?? இன்னும் அரசியல் வாதிகளையும், உருவாக்கிய இந்தக் கிராமத்தில் இவை மாத்திரமல்லாமல இயற்கை மூல வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. என்றால் மிகையாகாது.


யுத்தம் இல்லாத காலப்பகுதிகளில் இந்தப்; பகுதி மக்கள் இந்த இயற்கை மூல வளங்கள அனைத்தையும் பயன்படுத்தி உச்சப் பயனை அடைந்து வந்ததுள்ள னர் ஆனால் நாட்டில் ஏற்பட்ட துரதிருஸ்;ட வசமான யுத்தத்தின் காரணமாக இவை அனைத்தும் தூர்ந்து போய்க் கிடக்கின்றன. இவ்வாறான வளங்களை மீளப் பயன்படுத்துவதற்கு இந்தப்பகுதி மக்கள் அங்கலாத்துக் கொண்டிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.

மண்டூர் கிராமத்தில் பெரும் பங்குவகித்த இயற்கை மூல வளம் “களிமண்’’ஆகும் இதனைப்; பயன்படுத்தி மண்டுர் கிராமத்தில் பெரியதொரு ஒட்டுத் தொழிச்சாலை  நிறுவப்பட்டது அதன் மூலம் அன்றைய காலகட்டத்தில் அ இந்தபிரதேசமும் இன்னும் மட்டக்களப்பு மாவட்டமும் கிழக்கு மாகாணமும் பிரபல்யம் பெற்றிருந்தது என்றால் மிகையாகாது….

இங்குள்ள மூலவளங்களை கூர்ந்து ஆராய்ந்த அன்றைய ; தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசலிங்கம் அவர்களின் அயராத முயற்சின் பலனாக ஒர் ஒட்டுத்தொழிச்சாலையை நிறுவவேண்டும், அதன்முலம் அப்பிரதேசத்திலுள்ள பல மக்களுக்கு தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் இதனால் இப்பிரதேசமும் மாவட்டமும் மிளிர வேண்டும் என்ற நோக்குடன் 1977ம் ஆண்டு பல இலட்சம் ரூபாய்களைச் செலவு செய்து மண்டூர் ஒட்டுத் தொழிச்சாலையை ஆரம்பித்தார்.

அதன் பயனாக படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்த இந்த ஒட்டுத் தொழிச்சாலை காலப்போக்கில் ஒர்பிரபல்யம் பெற்ற தொழிச்சாலையாக மாற்றமடைந்து மிழிளிர்ந்தது. இதன்மூலம் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் மேலோங்கியது.

இதன் மூலம் தூர இடங்களுக்குச் சென்று ஓடு  கொள்வனவு செய்வது முற்றாக தடைப்பட்டு மிகவும் பெறுமதி வாய்ந்த தரமான ஓடுகளை நியாயமான விலையில் கொள்வனவு செய்யும் வாய்ப்பு இம்மாவட்ட மக்களுக்கு மாத்திரமல்லாமல் முழு கிழக்கிலங்கைக்குமே  கிடைத்திருந்தது. 
   
இவ்வாறு படிப்படியாக வளச்சியடைந்து எங்கு பார்த்தாலும் யார்பேசினாலும் மண்டூர் ஓட்டுத் தொழிச்சாலையின் ஓடு தான் வாங்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு விருத்தியடைந்திருந்தது. இதனால் வருமானங்களும் அதிகப்படியான தொழில் வாய்ப்புக்களும் பெற்று அப்பகுதி மக்கள் பலர் பயனடைந்து வந்தனர்.

இவ்வாறு உச்சப் பயனை அடைந்து கொண்டிருக்கும் போது 1980களில ;“சிங்கிங்ஸ் என்ரபிரைசஸ்” எனும் பெயரில் இது மாற்றப்பட்டு முகாமையாளர். கணக்காளர்.  போன்ற உயர் பதவிகளும் வழங்கப்பட்டு ஒர் உப்பத்தி திறன்சார்ந்த தொழில் நிறுவனமாக மாற்றமடைந்தது.

இவ்வாறு இயங்கிய ஒட்டுத் தொழிச்சாலையை 1983 இல் பொன்.செல்வராசா என்பவரால் பொறுப்பேற்கப்பட்டு நாடாத்தப்பட்டு வந்தது அது இந்திய இரானுவத்தினர் ஆக்கிரமிப்பு செய்திருந்த காலப்பகுதியாகும். இக்காலத்தில் மிகவும் கஸ்ரமான சூழ்நிலையிலும் பொன்.செல்வராசா இத்தொழிச்சாலையை நாடாத்திவந்தார் இதனால் இந்திய இராணுவத்தின் தொல்லைகள் இந்த தொழிச்சாலை மீது அடிக்கடி அதிகரித்த வண்ணமே இருந்தன. இந்த நெருக்கடி 1983 ஆம் அண்டு  தொடக்கம் 1988 ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது.

பல கஸ்ரங்களை எதிர் கொண்டு பல மக்களின் தொழில் வாய்ப்புக்களையும் தக்கவைத்துக் கொண்டு 1988 ஆம் ஆண்டு வரை மண்டூர் ஓட்டுத் தொழிச்சாலை சீராக இயங்கிவந்தது. அதன் பின்னர் இந்திய இராணுவம் இப்பிரதேசத்தினையும், இலங்கை நாட்டையும், விட்டு வெளியேறிய பின்பு 1990இல் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பு இத்தொழிற்சாலை மீது பாய்ந்தது.

இந்தக்காலம் மிகவும் பயங்கரமான கஸ்ரமான சூழ்நிலையாகும் இனப்பிரச்சனை, இடம்பெயர்வுகள், சொத்துக்கள், உயிர்கள், என பல இழப்புகளை மக்கள் சந்தித்தனர். இவையெல்லாவற்றையும் கடந்து இத்தொழிற் சாலையை நாடாத்தி வந்த வேளை 1990இல் இலங்கை இராணுவம் இத்தொழிற் சாலையை முற்றுகையிட்டு தாம் ஆக்கிரமித்து அந்த இடத்திலேயே பெரியதொரு முகாம் அமைத்துக் கொண்டனர். அன்றில் இருந்து தொழிச்சாலை இயங்கவுமிலலை, யாரும் அதன் அருகேயும் போகவும் முடியவில்லை, தொழிச்சாலையை நடாத்தக்கூடிய சூழ்நிலை தோன்றவில்லை அவற்றை முன்னெடுத்து நாடாத்துவதற்கு அனுமதிகள் மறுக்கப்பட்டன.

அன்றிலிருந்து அனைத்துச்; சொத்துகளும் அழிக்கப்பட்டன கட்டிடங்கள், உடைக்கப்பட்டன, சொத்துக்கள் இல்லாது ஒழிக்கப்பட்டன, பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். 

பின்னர் அங்கு சென்று பார்த்தால் வெறும்; கட்டிட சிதிலங்கள் மாத்திரமே இருந்தன. தொழிற்சாலை இருந்த தடயங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. தற்போதும்கூட தரிசு நிலமாக்கப்பட்டு காட்சிதரும் இந்த தொழிச்சாலையினை மீள்புனருத்தாரணம் செய்து இந்தப்பகுதி மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களையும், இப்பிரதேச வளப் பயன்பாட்டையும், தகுந்த சேவையினையும் மேற்கொள்ள இன்று வரை  யாரும் முன்வராத நிலையிலேயேதான் உள்ளது.

தற்போது இதன் சொத்துக்கள் உடமைகள் ஆவணங்கள் அனைத்தும் மட்டக்களப்பு இலங்கை வங்கியின் பொறுப்பில் உள்ளது. என தெரியவருகின்றது. 

இது இவ்வாறு இருக்க இந்த விடையத்தினைக் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண சபை இந்தத் தொழிச்சாலையை மீள இயங்கச் செய்யுமா? என்ற கேள்வியை இந்த பிரதேச மக்கள் எழுப்புகிறார்கள்.  கிழக்கின் அபிவிருத்தி என திட்டம் தீட்டியுள்ள மத்திய அரசும் மற்றும் கிழக்கு மாகாணசபை  ஏன் இந்த விடையத்தில் இதுவரைக்கும்  சிறிதளவேனும் அக்கறை காட்டவில்லை? கிழக்கு மாகாணத்தின் தொழிற் பேட்டைகளை அமைத்து அதிகளவான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது கிழக்கு முதல்வரின் கடைப்பாடு எனவும், இந்தப் பகுதிவாழ் மக்கள் கருதுகின்றனர்.

இவ்வேளையில் மத்திய அரசாங்கம் “கிழக்கின்’’ உதயம்” “கிழக்கின் அபிவிருத்தி” “கமநெகும” “மகநெகும” “திவிநெகும” என்றெல்லாம் புதிய புதிய, திட்டங்களை முன்வைக்கின்ற போதிலும் இவ்வாறாக கிழக்கில் தூர்ந்துபோய் கிடக்கின்ற இயற்கை மூல வளங்களையும் தொழில் பேட்டைகளையும் ஏன் இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது என மக்கள் அங்கலாய்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அரசியலிலும் அதிகாரிகளாகவும் இருப்பவர்கள் இதுபோன்ற திட்டங்களை அரசுக்கு எத்திவைக்க வில்லையா? அல்லது அவர்கள் எடுத்தியம்பி அரசு பாராமுகமாக இருக்கின்றதா? யார் தெழிவுபடுத்துவது எனத்தெரியாத நிலையில் உள்ளதாகவும்  மக்கள் முணுமுணுப்பதை அவதானிக்க முடிகின்றது.

யுத்தம், சுனாமி, வறுமை. என பலவற்றுக்கும் பக்கபலமாக உழைத்த நிறுவனங்களோ பற்பல…. வெறுமனே கட்டிடங்களையும் கடன் வசதிகளையும் எற்படுத்திக் கொடுத்தும் இன்று அவ்வாறான அபிவிருத்திகளில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான கட்டிடங்கள் எத்தனையோ மக்கள் பாவிக்காமலும், கடன் பெற்றவர்கள் எத்தனையோ பேர் தற்கொலைகளும் செய்யும் நிலைமையாகி தற்போது காணப்படுகின்றன. இருந்தும் இவ்வாறான அபிவிருத்திகள் மாத்திரம் மக்களுக்கு போதுமானதா? 

நீடித்து நிiலைக்கக்கூடிய வாழ்வாதரத்தினைக் கொண்டு செல்லக்கூடிய திட்டங்களை, மண்டூர் ஓட்டுத் தொழிச்சாலையைப் போன்ற செயற்றிட்டங்களை மீள இயங்கச் செய்வதற்கு எந்த விதமான அரசசார்பற்ற நிறுவனங்களும் தலைசாய்க்க வில்லையே என்பனவும் வேதனைக்குரிய விடயமே எனவும் இப்பிரதேசம் வாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பலர் 3வருடம், 5வருடம், 10வருடம், என பல மில்லியன் ரூபாக்களை வருடக்கணக்கில்  செலவு செய்து பலதிட்டங்களோடு வந்து ஆடுவளப்பு, மாடுவளப்பு, கோழிவளப்பு, பயிர்ச் செய்கை, கூட்டங்கள் கூடுவதற்கு என ஒரு கட்டிடமும் என செய்துவிட்டு போய்விட்ட சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமுள்ளன.

மண்டூர் ஓட்டத் தொழிச்சாலை போன்ற தொழில் பேட்டைகளை அமைத்து நீண்ட காலத்திட்டங்களை  முன்வைக்கும் பட்சத்தில் அதிகளவான நன்மைகளை மக்கள்; பெறுவார்கள்  என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கடந்த காலங்களில்  நடைபெற்ற சோகமான நிகழ்வுகளைக் கடந்து அவற்றை எல்லாம் மறந்து தற்போது சுமுகமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மக்களுக்கு வழிகாட்டல்களையும் தொழில் வாய்ப்புக்களையும் செய்து கொடுக்க வேண்டியது துறைசார் வல்லுனர்களினதும், அரசியல் வாதிகளின் கடமையல்லவா?

இந்த விடயம் பற்றி மண்டூர் கிராமத்தினைச் சேர்ந்த கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர் எஸ்.திருக்குமார் என்பவர் இவ்வாறு கூறுகின்றார்.

எமது கிராமத்தில் மாத்திரமின்றி இந்தப் பிரதேசம் மாத்தரமின்றி கிழக்கு மாகாணம் முழுவதுதும் மண்டூர் ஓடு மிகவும் பிரபலமாகியிருநதது. யுத்தம் இடையில் வந்து எல்லாவற்றையும் சடுதியாக தடுத்து நிறுத்தி விட்டது.

இதனை முன்னெடுத்து நடாத்தியவரும் தற்போது உயிருடன் இல்லை இதில் வேலை செய்த நூற்றுக் கணக்கானோர் அவர்களது வாழ்வாதாரங்கiயும் இழந்து தற்போது கூலி வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே தனியார் என்றாலும், அரசாங்கம் என்றாலும், எந்தத் தரப்பாயினும் பரவாயில்லை இந்த ஓட்டுத் தொழிற்சாலையினை மீள இயங்கச் செய்து, எமது பகுதியிலுள்ள இயற்கை மூலவளத்தின் உச்சப் பயன்பாட்டைப் பயன்படுத்துவதுடன், இப்பிரதேச மக்களுக்கும் தொழில் வாய்ப்பினையும் மேற்படுத்தவும், முன்வரவேண்டும் என அவரது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இந்த ஓட்டுத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட காலமிருந்து இறுதிக் காலம் வரை அதில் மேற்பார்வையாளராக தொழில் புரிந்த மண்டூர் கிராமத்தினைச் சேர்ந்த கு.இராஜேந்திரன் என்பவரைச் சந்தித்துக் கேட்டேன்.
 மண்டூர் ஓடு என்றால் அன்றய காலகட்டத்தில் அனைவராலும் பேசப்பட்டது, தற்போதும்கூட வீட்டுக் கூரைகளில் மண்டூர் ஓடு வேயப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. தற்போது இந்த ஓட்டுத் தொழிற்சாலையினை மீள இயங்கச் செய்தால் இப்பிரதேச மக்களுக்கு பெரும் வாய்ப்பாக அமையும், கடந்த காலத்தில் தொழிற்சாலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் தொழில் புரிந்து வந்தனர், இதனை இயங்கச் செய்வதற்கு தேவையான மூலப்பொருள் களி மண்ணை அருகிலுள்ள பாலையடிவட்டை, அலியார்வட்டை, போரதீவு, போன்ற பகுதிகளிலும் இதனை அண்மித்த பகுதிகளிலும் எடுக்கமுடியும் அரசாங்கமோ அல்லது தனியாரோ முன்வந்து இதனை முன்னெடுத்துச் சென்றால் பெரும் வாய்ப்பாக அமையும் என தெரிவித்த அவர்.

இதனை மீள இயங்கச் செய்வதற்கு தனியார்சிலர் முன்வந்தும் பின்னர் அவர்கள் அதில் ஆர்வம் கட்டவில்லை மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரனிடமும் எடுத்துக் கூறினோம் அவர் இதனை இயக்குவதற்கு உதவுவதாகத் தெரிவித்தார் இதுவரையில்  பாழடைந்த நிலையில்தான் உள்ளதே தவிர மீள இயங்கச் செய்வதற்கு முற்றுமுழுதாக துறை நிற்பவர்கள் யாருமற்ற நிலையேதான் காணப்படுகின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது மண்டூர் ஓட்டுத் தொழில்சாலை சம்மந்தமாக சொத்துக்கள் அனைத்தும் முன்னாள் தமிழரசுக் கட்சியின் பாராளுமக்ற உறுப்பினரான கணேசலிங்கத்தின் மனைவியான திருமதி.ஜே.என். கணேசலிங்கம் அவர்களின் பொறுப்பில் உள்ளதாகவும், ஆனால் யாரும் தனியார் முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய வசதிகளைச் செய்து கொடுக்கலாம், இதனால் அதிகபடியான மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களையும் இலகு சேவைகளையும் பெற்றுக்கொடுக்கலாம் எனவும் அறிய முடிகின்றது.

இதனை மீள இயங்கச்செய்வது தொடர்பில் கிழக்கு மாகாண சபையோ அல்லது இலங்கை அரசாங்கமோ முன்வரவில்லை எனவே என்ன காரணம் எனத் தெரியாதுள்ளது. இதனை கவனிக்காமல் இருப்பது இது சம்மந்தமாக அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறாமலுள்ளதும் எதிர்காலத்தில் இத்தொழிச்சாலையை இயங்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இதுவரை எந்த அரசியல்வாதிகளுக்கும் வரவில்லையே என்ற சந்தேகத்தினையும் எற்படுத்துவதாகவும் அப்குதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தூர்ந்து போன இயற்கை மூலவளங்களைப் பயன்படுத்தி தொழில் பேட்டைகளை அமைத்துக் கொடுக்க  வேண்டியது சம்மந்தப் பட்டவர்களின் கடமையல்லவா?  யுத்தம் புரையோடிப் போயிருந்த கிழக்கு  மாகாணத்தை  புனரமைப்பச் செய்ய வேண்டு மல்லவா அவற்றுக்கு மண்டூர் ஓட்டுத்தொழிச்சாலை போன்றவற்றை மீள்புனருத்தாரணம் செய்து பாவனையிலிட வேண்டும் என  பலரும்  எதிர்பார்த்து நிற்கின்றனர். 

(எஸ்.ஜதுர்சயன்)
SHARE

Author: verified_user

0 Comments: