18 Jan 2014

ஆண்கள்இ பெண்கள் என தனித்தனி பாடசாலைகளில் உருவாக்கப்பட்டதன் பின்னரே கல்வித் துறையில் துரித வளர்ச்சி ஏற்பட்டது

SHARE
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலைஇ மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களில் ஆண்கள்இ பெண்கள் என தனித்தனி பாடசாலைகளில் உருவாக்கப்பட்டதன் பின்னரே கல்வித் துறையில் துரித வளர்ச்சி ஏற்பட்டது என கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் நிஷாம் குறிப்பிட்டார்.

ஆண்களின் கல்வி வீழ்ச்சி அடைந்தும் பெண்களின் கல்வியில் சடுதியான
வளர்ச்சிப் போக்கினையும் காட்டி நிற்கின்றது. ஆண்கள் பாடசாலையினை
தனியாகவும்இ பெண்கள் பாடசாலையினை தனியாகவும் மாற்றப்பட்டதன் மூலம் ஆண்கள் பாடசாலையினை பொறுப்பேற்று வழி நடத்தும் அதிபர்இ ஆசிரியர்கள் மிகுந்த அவதானத்துடன் ஒவ்வொரு மாணவர்களிலும் தனிப்பட்ட கவனம் எடுத்து கற்பிக்க வேண்டியது அவசியமாக்கப் பட்டுள்ளது.

அப்படி ஆக்கபூர்வமான முயற்சி எடுக்கும் போதுதான் ஆண்களின் கல்வியினை வலுவாக்கக் கூடியதாக அமையும் என்பதோடு பாடசாலையின் தரத்தினைப் பேணுவதற்காக விஷேட முயற்சி எடுத்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள் என்பதுவே உண்மை.
ஆரையம்பதி பிரதேசத்தில் மிக நீண்ட நாள் கோரிக்கையாக விடுவிக்கப்பட்டுவந்த ஆண்இ பெண் பாடசாலைகள் தேவைப்பாடு இதன் மூலம் நிறைவேறியுள்ளது.

வரவேற்கக்கூடிய சிந்தனையாகும் எனுவும் குறிப்பிட்டார்.
ஆரையம்பதி மகா வித்தியாலயம் பாடசாலையினை ஆண்கள் பாடசாலையாகவும் கடந்த 16.01.2014 அன்று ஆரையம்பதி இ.கி.மி.த.க பாடசாலையினை பெண்கள் பாடசாலையாகவும் மாற்றும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுமார் 20 வருடத்திற்கு மேலாக ஆரையம்பதியில் உள்ள மகா வித்தியாலயம்இ
இ.கி.மி.த.க பாடசாலைகனை ஆண்இ பெண் பாடசாலையாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவந்த போதும் பல்வேறு காரணங்களினால் நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாகவும் தற்போது இப் பிரதேசத்தின் பாடசாலைகளின் கல்வி வலுவாக்கத்தில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சி நிலையினைக் கருத்திற் கொண்டு இருபாடசாலை அதிபர்இ பெற்றோர்கள்இ மற்றம் சமுக அமைப்புக்கள் விடுத்த
கோரிக்கைகளை அடுத்து முதற் கட்டமாக தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையான மாணவர்களினை ஆண்இ பெண் பாடசாலையாகப் மாற்றும் நிகழ்வு இன்று கோட்டக்கல்வி பணிப்பாளர் கந்தசாமி தலைமையில் ஆரையம்பதி மகா வித்தியாலயப் பாடசாலையில்
நடைபெற்றது.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண கல்விப் பணிப்பாளர் நிஷாம்இ மட்டக்களப்பு வலயக் கல்வி திருமதி.சுபா சக்கரவர்த்திஇ பாடசாலை அதிபர்கள் தவேந்திரகுமார்இ திருமதி.தங்கவடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: